மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் கிடையாது ஏன்?

114

மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் கிடையாது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பிறந்துவிட்டால் போது பெண்கள், அதிகாலையிலேயே எழுந்து வாசலில் கோலமிடுவார்கள். கோயிலுக்கு சென்று வருவார்கள். ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலில் பஜனை மேற்கொள்வார்கள். அதோடு, பஜனை பாடிக் கொண்டே தெரு முழுவதும் சுற்றி வருவார்கள். கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும். ஆனால், இப்படி எல்லாம் விசேஷம் கொண்ட இந்த மார்கழியில் மட்டும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள்.

ஏன், என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் நடக்காததால் இந்த மாதத்தைல் சிலர் பீடை மாதம் என்கின்றனர். உண்மையில் அப்படியில்லை. பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளனர். ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு உகந்த மாதமோ, அதே போன்று மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறந்த மாதமாகும். நமது ஆசா, பாசங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டிய மாதம். இதன் காரணமாகத்தான் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.