மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா?

118

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா?

ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும் பல விதமான பண்டிகைகள், விழாக்கள் வருவதுண்டு. இதுதவிர, குறிப்பிட்ட சில மாதங்களில் மாரியம்மன், காளியம்மன் திருவிழாவும் வருவதுண்டு. இப்படி பல பண்டிகைகள், திருவிழாக்களைக் கொண்டது தான் தமிழர்களின் மரபு. ஒவ்வொரு விசேஷங்களின் போதும் நமது வீடுகளில் மாவிலை தோரணம் கட்டுவது வழக்கம். அப்படி மாவிலை தோரணம் கிடைக்கவில்லை எனில் வேப்பிலையை தோரணமாக கட்டுவது வழக்கம். அது ஏன்? எதற்காக கட்டுகிறோம்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்….

வீட்டு விசேஷங்களின் போது சொந்த, பந்தங்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்போம். அதன் பேரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்திருப்பார்கள். வருபவர்களில் சிலருக்கு உடல் உபாதைகள் இருந்திருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் விசேஷத்திற்கு வந்திருப்பார்கள். அவர்கள், வருவதை தடுக்க முடியாத போதிலும், அவர்களால் ஏற்படக் கூடிய நோய் தொற்றுகளை தடுக்க வேண்டியது நமது கடமை.

அதற்குரிய பரிகாரம் தான் இந்த மாவிலை தோரணம். மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. பூஜையின் போது மாவிலை வைத்து அதன் மீது கலவம் வைத்து பூஜை புனஷ்காரங்கள் செய்வது வழக்கம். பூஜை முடிந்த பிறகு அந்த மாவிலை மூலமாக கலசத்தில் உள்ள நீரை எடுத்து வீடு முழுவதும் நாம் தெளிப்போம். இதனால், ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயு அதிகமாக இருக்கும்.

வீடுகளில் மாவிலை தோரணம் கட்டுவதால் வாஸ்து பிரச்சனைகள் சரியாகும். மேலும், எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைவதும் தடுக்க முடியும்.

மாவிலை தோரணமானது வீட்டிலிருந்து காற்றினை சுத்தம் செய்யக்கூடியது. ஆதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

பண்டிகை, திரு விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வருபவர்களின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைகிறது. அது காய்ந்து போனாலும், அதனுடைய சக்தி குறைவது இல்லை.

இப்படி அதிக சக்தி மிக்க மாவிலை தோரணத்தை கட்டுவதனால், வரும் சிறப்பைத் தெரிந்து கொண்டு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட அலங்கார தோரணங்களை தவிர்த்திடுவது நல்லது.

மாவிலை தோரணம் குறித்து நமது தலைமுறையினருக்கும் உணர்த்திடுவோம்…இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்.