முடி காணிக்கை என்பதன் அர்த்தம் தெரியுமா?

186

முடி காணிக்கை என்பதன் அர்த்தம் தெரியுமா?

சோழ வம்சத்தில் அடுத்த அரசன் பதவி ஏற்க சூடிக் கொள்ளும் மணிமுடி (கிரீடம்), பழைய அரசன் மணிமுடி இரண்டையும் கொண்டு போய் திருமலை வேங்கடவன் மூலவர் முன் வைத்து அர்ச்சனை செய்து பழைய அரசனின் மணிமுடியை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டு பிறகு புதிய மணிமுடியை தில்லை அம்பலத்தில் புதிய அரசன் தலையில் சூடிக் கொள்வதே வழக்கம்.

பாண்டிய வம்சத்தில் அடுத்த அரசன் பதவி ஏற்க சூடிக் கொள்ளும் மணிமுடி (கிரீடம்,) பழைய அரசன் மணிமுடி இரண்டையும் கொண்டு போய் எருமலை ஐயங்கார் (தற்போது ஐயப்பன்) மூலவர் முன் வைத்து அர்ச்சனை செய்து பழைய அரசனின் மணிமுடியை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டு பிறகு புதிய மணிமுடியை மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய அரசன் தலையில் சூடிக் கொள்வதே வழக்கம்.

சேர வம்சத்தில் அடுத்த அரசன் பதவி ஏற்க சூடிக் கொள்ளும் மணிமுடி (கிரீடம்), பழைய அரசன் மணிமுடி இரண்டையும் கொண்டு போய் குருவாயூர் அப்பன் (தற்போது இது கிருஷ்ணன் கோயில்) மூலவர் முன் வைத்து அர்ச்சனை செய்து பழைய அரசனின் மணிமுடியை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டு பிறகு புதிய மணிமுடியை உடுப்பியில் உள்ள சிவன் கோயிலில் (கர்நாடக மாநிலத்தில் உள்ளது தற்போது இதுவும் கிருஷ்ணன் கோயில் ஆனால் சிவலிங்கம் சிறு கோயிலாக இன்னும் உள்ளது) புதிய அரசன் தலையில் சூடிக் கொள்வதே வழக்கம்.

இந்த அரச குல வழக்கங்கள் நாளடைவில் தலைமுடி காணிக்கை என்பதை தலையில் மொட்டை போட்டு கூந்தலை காணிக்கை செலுத்துவது என்று மாற்றப்பட்டுள்ளது.