மூலஸ்தானத்தில் திரையிட்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தை சுற்றி வரலாமா?

80

மூலஸ்தானத்தில் திரையிட்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தை சுற்றி வரலாமா?

கோயில்களில் மூலஸ்தானத்தில் திரைபோட்டு அலங்காரம் செய்யும் போது வெளியில் பிரகாரம் சுற்றி மற்ற சந்நதிகளை தரிசனம் செய்து வரலாமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது. பொதுவாக கோயிலில் நடை சாற்றியிருக்கும் போது விளக்கேற்றக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், திரைபோட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போது வெளியில் பிரகாரம் சுற்றி வருவதோடு எல்லா சன்னதிகளையும் தரிசனம் செய்யலாம். அபிஷேகம் பூர்த்தியாகும் வரை நின்று மூலஸ்தானத்தை தரிசனம் செய்தபின் அலங்காரம் செய்வதற்காக திரையிட்டு மறைப்பது வழக்கம்.

அந்த நேரத்தில் பிரகாரத்தில் அமைந்திருக்கும் மற்ற சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மீண்டும் மூலஸ்தானத்திற்கு சென்று முழுமையாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் இறைவனுக்கு செய்யப்படும் தீபாராதனையை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.