யானை கனவில் வந்தால் என்ன பலன்?

70

யானை கனவில் வந்தால் என்ன பலன்?

  1. யானை கனவில் வந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
  2. யானை மீது சவாரி செய்வது போன்று கனவு கண்டால் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
  3. உங்களுக்கு யானை மாலை போடுவது போன்று கனவு வந்தால் பெரிய உயர் பதவிகள் தேடி வரும். அதோடு, செல்வ, செல்வாக்கு உயரும் என்பது பொருள்.
  4. யானை உங்களை துரத்துவது போன்று கனவு கண்டால் புதிதாக ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம். மேலும், பழைய பிரச்சனைகளும் தலைதூக்கும்.
  5. யானை உங்களுக்கு ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு வந்தால் மிகவும் நல்லது.
  6. யானை உங்களைத் தேடி வீட்டு வாசலுக்கு வந்து நிற்பது போன்று கனவு வந்தால் நன்மை உண்டாகும்.
  7. யானைக்கு உணவு அளிப்பது போன்று கனவு வந்தால் ஏராளமான நன்மைகள் நடைபெறும் என்று பொருள்.