யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? நடை சாற்றப் போகிறோம்! அதிசய கோயில்!

299

யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? நடை சாற்றப் போகிறோம்! அதிசய கோயில்!

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் என்ற ஊரில் உள்ள கோயில் மகாதேவர் கோயில். இந்தக் கோயிலில் மகாதேவர் மூலவராக காட்சி தருகிறார். கோயிலில் தல விருட்சமாக ஆலமரம் திகழ்கிறது. கார்த்திகை அஷ்டமியையொட்டி வைக்கத்தஷ்டமி திருவிழாவானது 13 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், மாசி மாதம் வரும் அஷ்டமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. கோயிலில் அம்மன் இல்லை என்றாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 நாட்கள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது.

Important One Read This: ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் வசியமாக்கும் மூலிகை!

வருடந்தோறும் கார்த்திகை கிருஷ்ண அஷ்டமி நாளில் காலை 4 மணி முதல் 8 மணி வரையில் சிவனை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக சொல்லப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய நாள் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்யப்படுகிறது. எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக இந்த மகாதேவர் திகழ்கிறார்.

கோயில் மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயரத்தில் லிங்கம் உள்ளது. அம்மனுக்கு சன்னதி கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வழிபட்டால் பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வன துர்க்கையை வழிபட நம்மிடமுள்ள அரக்க குணங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

Click and Read This: குடும்ப பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில்!

வைக்கத்தஷ்டமி:

சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழித்து முருகப் பெருமான் வெற்றி பெற வைக்கத்தஷ்டமி நாளனறு சிவபெருமானே நேரடியாக இங்கு வந்து அன்னதானம் செய்ததாக தல புராணம் கூறுகிறது. ஆதலால், இந்தக் கோயிலில் வைக்கத்தஷ்டமி நாளன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கு பிராத்தல் என்று பெயர். இந்த அன்னதானத்தில் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம்.

வனதுர்க்கை சன்னதி:

கோயிலின் தெற்குப் பகுதியில் வன துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சன்னதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இந்தக் கோயிலில் லிங்க பிரதிஷ்டை செய்த போது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வ கன்னி இப்படி அரக்கியாக மாறியிருப்பது தெரியவந்தது. அவளுக்கு சாப விமோட்சனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்டினார். விநாயகர், திரிசூலியை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார். அப்படி செய்ததில் உடல்பகுதி விழுந்த இடத்தில் தான் வன துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் நம்மை பிடித்த அரக்க குணங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.

Read This: சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் – புராணக் கதைகள்!

அரக்கின் தலைப் பகுதி முத்தோடத்து காவிலும், கால் பகுதி குடிச்சேலிலும் விழுந்துள்ளது. திரிசூலியை அனுப்பிய கணபதி, இந்தக் கோயிலின் பலிபீடம் அருகே இருக்கிறார். கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 லிங்கங்களைக் கொடுத்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய கூறினார். வலது கையில் ஒரு லிங்கமும், இடது கையில் ஒரு லிங்கமும், வாயில் ஒரு லிங்கத்தையும் அந்த அசுரன் எடுத்துச் சென்றான். அப்போது புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் சிவனை நோக்கி தவம் இருந்தார்.

முனிவரது தவத்தின் பலனாக கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி நாளில் சிவன் காட்சி கொடுத்தார். மேலும், வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு வியாக்ரபாதரோ, இந்த நாளில் தங்களை இந்த இடத்தில் வந்து தரிசனம் செய்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டினார். இதுவே வைக்கத்தஷ்டமி விழாவாக கொண்டாடப்படுகிறது.

More Details: அமாவாசைக்கு சமையலில் ஏன் வாழைக்காய் பயன்படுத்துகிறோம்?

இதன் பிறகு தனது வலது கையில் கொண்டு வந்த லிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார். வியாக்ரபாதர் வழிபாடு செய்த அந்த இடம் தான் வைக்கம் என்று அழைக்கப்படுகிறது. கரன் தனது இடது கையில் கொண்டு வந்த லிங்கத்தை ஏற்றமானூரில் மேற்கு நோக்கியும், வாயில் கடித்து கொண்டு வந்த லிங்கத்தை கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காலங்காலமாக இந்தக் கோயிலில் நடை சாற்றுவதற்கு முன்னதாக கோயிலின் அர்ச்சகர் வெளியில் வந்து யாரேனும் பசியோடு இருக்கிறீகளா? யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? கோயில் நடை சாற்றப்போகிறோம் என்று கேட்பது வழக்கமாம். காரணம், இந்தக் கோயிலில் சிவபெருமானே வந்து அன்னதானம் வழங்கியுள்ளதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூட கோயில் அர்ச்சகர் வந்து யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.