யாரை எத்தனை முறை வலம் வர வேண்டும் தெரியுமா?

227

யாரை எத்தனை முறை வலம் வர வேண்டும் என்று தெரியுமா?

பொதுவாக கோயிலுக்கு சென்று வழிப்படும் பொது நம்மை அறியாமலும் பல முறை கோயிலை சுற்றி வளம் வருவோம். விநாயகர் கோயில், சிவன் கோயில், பெருமாள், ஆஞ்சநேயர், முருகன் கோயில், அம்மன் கோயில் என்று நாம் சென்று வந்தால் பல முறை வளம் வருவோம். ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதோடு கோயில்களில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் பிரகாரத்தை சுற்றி வர வேண்டும். மேலும் இடமிருந்து தான் வலம் சுற்ற வேண்டும். சரி, எத்தனை முறை சுற்றினால் என்ன நன்மை நடக்கும் என்று இங்கு பார்ப்போம்…

1 முறை சுற்றினால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம்.
3 முறை வலம் வந்தால் மனதில் உள்ள சுமை குறையும்.
5 முறை சுற்றினால் இஷ்ட சித்தி (மோட்சம்) கிடைக்கும்.
7 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நடைபெறும்.
9 முறை சுற்றி வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
11 முறை சுற்றினால் ஆயுள் கூடும்.
13 முறை சுற்றி வந்தால் வேண்டிய வரம் கிட்டும்.
15 முறை வலம் வந்தால் பண கஷ்டம் நீங்கி தனப்ராப்தி உண்டாகும்.
17 முறை சுற்றினால் தானியம் பெருகும்.
19 முறை சுற்றினால் அதிர்ஷ்டம் தேடி வரும்.
21 முறை வலம் வந்தால் கல்வியறிவு பெருகும்.
23 முறை சுற்றினால் அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும்.
108 முறை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
208 முறை சுற்றி வந்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.

விநாயகர் கோயில்:
விநாயரை 3 முறை வலம் வர வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக ஒரே ஒரு முறை மட்டுமே வலம் வந்தால் போதுமானது. தடைகள் நீங்கி வெற்றிகள் தேடி வரும்.

சிவன் கோயில்:
சிவனை வழிபடு செய்துவிட்டு பிரகாரத்தை 5 முறை சுற்றி வர வேண்டும். அப்படி சுற்றி வந்தால் எண்ணியது நடப்பதோடு மோட்சம் கிடைக்கும்.

முருகன் கோயில்:
முருகன் கோயிலில் 6 முறை வலம் வர வேண்டும். அப்படி செய்தால் கூர்மையான அறிவும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

அம்மன் கோயில்:

அம்மன் கோயிலில் 5 முறை சுற்றி வந்தால் வெற்றி கிடைக்கும். அதோடு வெள்ளி முதல் செவ்வாய் வரை தொடர்ந்து 5 நாட்கள் வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும்.

நவக்கிரகம்:
நவக்கிரகத்தை 9 முறை சுற்றி வர வேண்டும். அதோடு ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை சொல்லி வந்தால் எதிரிகள் தொல்லை நீங்குவதோடு வாழ்க்கை பயனுள்ளதாக மாறும்.

திருமால் கோயில்:
மஹாவிஷ்ணுவை 3 முறை வலம் வந்தாலே போதும். அப்படி சுற்றி வந்தால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு கூடும்.
இதே போன்று சூரிய பகவானை 2 முறையும், லட்சுமி தாயாரை 5 முறையும், அரச மரத்தை 7 முறையும், மகான்களின் சமாதியை 4 முறையும் வலம் வர வேண்டும்.

தோஷம் நீங்க பெருமாளையும், தாயாரையும் 4 முறை வலம் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில்களில் ஆலய பலிப்பீடம் மற்றும் கொடிக்கப்பம் ஆகிய இடங்கள் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மேலும், சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் தொடக் கூடாது.