யுகத்திற்கு யுகம் வேறுபட்ட சண்டிகேஸ்வரர் பதவி

85

யுகத்திற்கு யுகம் வேறுபட்ட சண்டிகேஸ்வரர் பதவி

சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாகம புராணங்களின் படி

கிருத யுகம் – நான்கு முக சண்டிகேசுவரர்

திரேதா யுகம் – மூன்று முக சண்டிகேசுவரர்

துவாபர யுகம் – இரண்டு முக சண்டிகேசுவரர்

கலியுகம் – ஒரு முக சண்டிகேசுவரர்

படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் சண்டிகேசுவர பதவியில் இருந்துள்ளார். இவரை சதுர்முக சண்டிகேசர் என்று அழைப்பர். இவர் நான்கு முகத்தோடு இருக்கிறார்.

யமனுக்கு சண்டிகேசுவரர் பதவி

தர்மத்தின் கடவுளாக உள்ள யம தேவன், சண்டிகேசுவரர் பதவியில் இருந்தவர். தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யம தேவன் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமன் சண்டிகேசுவரராக உள்ளார். இவரை யம சண்டிகேசுவரர் என்று அழைக்கின்றனர்.

நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி

விசாரசருமருக்கு சண்டிகேசர் பட்டம் தருகின்ற சிவபெருமான்.

ஏழாம் நூற்றாண்டில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.

விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார்.

அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.

விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

இவருடைய காலம் கிபி-400-1000 என்று கருதப்படுகிறது.

ஓம் நமசிவாய

சிவாய நம