வயதானால் எல்லா நோயும் வருமா?

100

வயதானால் எல்லா நோயும் வருமா?

பிறப்பு என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக இறப்பு என்ற ஒன்று இருக்கும். ஆனால், அது இயற்கையாகவா அல்லது நோய்வாய்பட்டா என்பது அவரவர் வாழும் முறையைப் பொறுத்தது என்று பலரும் சொல்கிறார்கள். மேலும், வயதானால் எல்லா வியாதியும் வரும் என்கிறார்கள். இது உண்மையா என்று கேட்டால் இல்லை. உங்களை படைத்தது அந்த இறைவன் அல்லது இயற்கை என்று நீங்கள் நம்பினால், உங்களை முழுமையாக படைத்திருக்கிறார் அல்லது படைத்திருக்கிறது என்று நம்ப வேண்டும்.

உங்களது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாட்களும் பயன்படக் கூடியவை தான். அப்படித்தான் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் போன்று வாழும் மிருகங்களைப் பார்த்தால் புரிய வரும். சாகும் வரை தனது வேலைகளை தானே செய்து கொள்கிறது. எந்த சிங்கமோ, ஆடோ, மாடோ எனக்கு வயதாகிவிட்டது என்று தனது குட்டியிடம் சென்று சாப்பாடு கேட்பதில்லை.

எந்த விலங்காக இருந்தாலும் படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. சாகும் வரையில் ஆரோக்கியமாக சுயமாக தனது வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால், நோய் வரும், இயலாமை வரும் என்று எப்போதும் அடுத்தவர்களை நம்பி எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

முதுமை என்று எதுவும் இல்லை,

நோய் என்று எதுவும் இல்லை,

இயலாமை என்று எதுவுமில்லை,

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. எனவே சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

உண்மையில் நம் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டு, வாழும் போது நல்லது கெட்ட்து என்று அனைத்தையும் அனுபவித்து, பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து நான் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து வந்துவிட்டேன். இதையடுத்து நான் எனது அடுத்த கட்ட்த்துக்கு செல்கிறேன். சென்று வருகிறேன். நீங்கள் வாழும் போது நிம்மதியாக, மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, தானும் சந்தோஷமாக, யாருக்கும் கெடுதலும், தீங்கும் விளைவிக்காமல் வாழுங்கள் என்று நம் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மன நிறைவோடு நம் உடலைத் துறக்க வேண்டும்.

யாருடைய மரணமும் மருத்துவ மனையில் நிகழக் கூடாது. எப்போதும் நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.