வறுமையை போக்கும் அன்னாபிஷேகம் வழிபாடு!

107

வறுமையை போக்கும் அன்னாபிஷேகம் வழிபாடு!

ஜாதகத்தில் வரும் 27 நட்சத்திரங்களின் தந்தையாக இருப்பவர் தட்சன். அவர் தனது 27 பெண்களையும், அழகு நிறைந்த சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். ஆனால், சந்திரனுக்கோ ரோகிணி மீது தான் அதிக அன்பு இருந்தது. இதனால், மற்ற பெண்கள் தங்களது தந்தையான தட்சனிடம் இது குறித்து தெரிவித்தனர். இதன் காரணமாக தட்சன், சந்திரனுக்கு சாபமிட்டார்.

இந்த சாபத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் சந்திரன் தேய்ந்து காணப்பட்டார். இந்த சாபம் நீங்கவே சந்திரன், சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தான். இதையடுத்து, சந்திரனின் தவத்தால் மனமகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அருள் புரிய, சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றது. சந்திரன் தனது சாபம் நீங்கப் பெற்ற நாள் தான் ஐப்பசி பௌர்ணமி. சந்திரனைப் போன்று நாமும் முழு ஆற்றலையும் பெற சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது.

சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியில் விழச் செய்த நாள் தான் ஐப்பசி பௌர்ணமி. ஜாதகத்தில் அன்னம் என்பதற்குரிய காரக கிரகம் சந்திர பகவான். அன்னம் எனப்படும் மாத்ரு காரகனும் சந்திர பகவான் தான். உலகிற்கு எல்லாம் படியளக்கும் அன்னபூரணியான பார்வதி தேவியை வணங்க காரக கிரகமாக இருப்பதும் சந்திர பகவான் தான்.

இவ்வளவு ஏன் அன்பு, பாசம் ஆகியவற்றிற்கும் கூட காரக கிரகமாக இருப்பதும் சந்திர பகவான். ஜாதகத்தில் சந்திர பகவான் 6, 8 மற்றும் 12 ஆகிய மறைவு ஸ்தான்ங்களில் தொடர்பு பெற்றோ அல்லது பாதகாதிபதி தொடர்பு பெற்றோ அல்லது நீச்சமடைந்து நின்றாலோ அந்த ஜாதகாரருக்கு பால், தயிர், அரிசி, சோறு ஆகியவற்றை அடிக்கடி வீணடிப்பதால் அன்னதோஷம் பாதிப்பு ஏற்படும்.

ஜாதகத்தில் 2ஆம் பாவத்தில் சூரியன் அசுப பலன் பெற்றிருந்தால் கோதுமை, தக்காளி, கேரட், மற்ற காய்கறிகள், கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை வீணடிப்பார். இதுவே ஜாதகத்தில் செவ்வாய் அசுப பலன் பெற்று 2ஆம் பாவத்தில் நின்றால் அந்த ஜாதகர் வத்தல் வகைகள், ஊறுகாய், சூடான சாப்பாடு ஆகியவற்றை வீணாக்குவார்.

இப்படி சாதத்தை வீணாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதாலும் அன்னதோஷமும், அன்னதுவேஷமும் பாதிப்பு ஏற்படுகிறது. அன்னாபிஷேக நாளின் போது சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்தால், இந்த தோஷ பாதிப்பு நீங்கும். சந்திரன் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இருவரையும் குறிக்கும் அன்னபூரணியை வணங்கி வந்தால் உணவு வீணாக்கப்படுவது குறையும். மேலும், ஆயுள் இருக்கும் வரையில் உங்களுக்கு உண்டு தட்டுப்பாடு ஏற்படாது.

உணவுக்கு காரக்னான சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, வெள்ளை அல்லி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதோடு, பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக அளித்தால் சந்திர பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும். மேலும், உணவு தட்டுப்பாடும் உங்களுக்கு வராது.