விதவைப் பெண் எதிரில் வந்தால் அபசகுனமா?

132

விதவைப் பெண் எதிரில் வந்தால் அபசகுனமா?

பழங்காலத்தில் நமது முன்னோர்களின் சராசரியான ஆயுள் காலம் 50 வயதுக்கு குறையாமல் இருந்தது. மேலும், இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கும் இருந்துள்ளது. அதோடு, அத்தை மகள், தாய் மாமா மகளை திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை இருந்துள்ளது. தாத்தா ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும் செய்துள்ளார்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு அவரது கணவன் இறந்துவிட்டால் அவர்கள் பூ, நெற்றியில் குங்குமம், வளையல் என்று எதுவும் அணியக் கூடாது. வெள்ளை நிற புடவையில் மட்டுமே தான் இருக்க வேண்டும். ஆனால், புதிதாக திருமணமாகி கணவன் – மனைவியாக வெளியில் செல்லும் போது அவர்களது எதிரில் வெறும் கழுத்தோடு பூவும் பொட்டும் இல்லாமல் கணவனை இழந்த பெண்கள் வரக்கூடாது என்று சொல்வார்கள்.

ஏனென்றால், அந்த புதுமண தம்பதிகளைப் பார்க்கும் போதோ அல்லது அலங்காரம் செய்து கொண்ட திருமண பெண்ணையோ பார்க்க நேரிட்டால் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படுவார்கள். அது ஏதாவது ஒரு வகையில், வெளியில் செல்லும் புதுமண தம்பதிகளுக்கோ அல்லது அலங்காரம் செய்து கொண்ட பெண்ணுக்கோ கண் திருஷ்டி போன்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

இது தம்பதிகளையும், அலங்காரப் பெண்ணையோ பாதிக்கப்படுவதோடு, விதவைப் பெண்ணுக்கும் மன ரீதியாக வேதனையை அளிக்கும். இது போன்ற காரணங்களுக்காக கொண்டு வரப்பட்ட சம்பிரதாயமே தவிர, இதில், எந்த அபசகுனமும் இல்லை. அபசகுனம், அபசகுனம் என்று சொல்வதே அவர்களுக்கு வேதனையை தருவது போல் ஆகிவிட்டது.