வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த மாதம், நட்சத்திரம் எது தெரியுமா?

82

வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த மாதம், நட்சத்திரம் எது தெரியுமா?

வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வச்சாங்க? சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரது கனவு. இளமை காலம் முதல் சிறு சிறு சேர்த்து, கடன் வாங்கி சின்னதா ஒரு வீடு கட்டி அதில் மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மாவுடன் வாழ வேண்டும் என்பது பலரது கனவு லட்சியம்.

அப்படி சிறுக சிறுக சேர்த்து வைத்து கட்டிய புதிய வீட்டுக்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும். அப்படியொரு நாளில் கிரகப்பிரவேசம் செய்வதே சிறப்பு வாய்ந்தது. கட்டிய புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்கு நல்ல மாதம் என்று சில மாதங்கள் இருக்கின்றன. அதே போன்று நல்ல நட்சத்திரங்கள், ராசிகள் என்றும் இருக்கின்றன.

கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் கிரகப் பிரவேசம் செய்வதற்கான சிறந்த மாதங்கள். இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்தால், குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் நிலவும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சந்ததிகள் கடந்தும் வீடும், வாசலும் நிலைக்கும் என்பது ஐதீகம்.

கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த கிழமைகள்:

திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 4 கிழமைகள் மட்டுமே கிரகப் பிரவேசம் செய்வதற்கு உகந்த கிழமைகள்.

கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த நட்சத்திரங்கள் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த லக்னங்கள்:

ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்கள் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த லக்னங்கள் ஆகும்.

இந்த மாதங்களில் கிரகப்பிரவேசம் கூடாது:

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசமும் வைக்கக் கூடாது. இந்த மாதங்களில் வீட்டை காலி செய்து வீடு வாடகைக்கும், ஒத்திக்கும் செல்லக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.