வீட்டிற்கு முன் காகம் வந்து கரைந்தால் விருந்தினரகள் வருவார்களா?

113

வீட்டிற்கு முன் காகம் வந்து கரைந்தால் விருந்தினரகள் வருவார்களா?

வீட்டிற்கு காகம் வந்தால் விருந்தினர் வருவார்கள் என்றும், தலையிலோ அல்லது உடலிலோ எங்கேனும் காக்கா எச்சம் போட்டால் உடனே பணக்காரனாகிவிடுவோம் என்று பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். இது உண்மை தானா? வீட்டிற்கு முன் காக்கா வந்து கரைந்தால் சொந்தக்காரர்கள் வருவார்களா? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பழங்காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், உறவினர்கள் வருகையோ அல்லது வீட்டு விசேஷமாகவோ இருந்தால் வீட்டிற்கு வெளியில் வைத்து சமையல் செய்யும் ஒரு வழக்கம் இருந்தது. மேலும், வெளிப்புறத்தில் கிணறு இருக்கும். அங்கு வைத்து தான் குளிப்பதற்கு வெந்நீரும் போடுவார்கள்.

இதே போன்று தோட்டமும், கழிவறையும் கொல்லைப்புறம் இருக்கும். வீட்டிற்கு நிறைய உறவினர்கள் வந்துவிட்டால் வெளிப்புறத்தில் உள்ள சமையல் பகுதியில் தான் நடக்கும். வெளிப்புறம் என்பதால், சமையல் சாதம் வடிப்பதைப் பார்த்துக் கொண்டு அங்குள்ள மரங்களில் காகம் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும். சமைத்து முடித்து விருந்தினர்கள், உறவினர்கள் என்று அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சத்தை காகத்திற்காக வெளியில் கொட்டுவார்கள்.

அப்படி சாதத்திற்காக ஒரு காகம் மற்ற எல்லா காகத்திற்காக கரைந்து ஒட்டு மொத்த காக்கையும் சாதத்திற்கு வட்டமிட்டு இறுதியாக சாப்பிடும். இதை வைத்து தான் அக்கம் பக்கத்தினர், விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வர். இது தான் நாளடைவில் வீட்டிற்கு முன் வந்து காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்று சொல்லப்பட்டது.