வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

96

வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

வீடு என்பது குடும்பம், சந்தோஷம், நிம்மதி என்று அனைத்தும் நிறைந்த ஒன்று. வேலைக்கு சென்றவர்கள், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் நிம்மதி, சந்தோஷம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்கக்கூடிய இடமாக வீடு இருக்க வேண்டும். காலை மற்றும் மாலையில் இரு நேரங்களிலும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

ஆனால், வீட்டில் நிம்மதியில்லை, சந்தோஷமில்லை என்றால் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். சரி, வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகளை எலுமிச்சைக் கொண்டு எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பின், வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்சனை, உறவில் விரிசல், பணக்கஷ்டம், துன்பங்கள் என்று அடுத்தடுத்து பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி, எதிர்மறை சக்திகள் இருப்பின், அதனை 3 எலுமிச்சை பழங்களை வைத்து உறுதி செய்ய முடியும். அதே போன்று அந்த எலுமிச்சை வைத்தே எதிர்மறை சக்தியை வீட்டிலிருந்து விரட்டியடிக்கவும் முடியும். நாம், எப்போதும் வெளியில் செல்லும் போது எலுமிச்சம் பழத்தை உங்களது பையில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி நீங்கள் எடுத்துச் செல்லும் எலுமிச்சம் பழமானது, நீங்கள் வீடு திரும்பிய பின் வந்து பார்த்தால் அது காய்ந்திருப்பின், உங்களை நோக்கி எதிர்மறை சக்திகள் வந்திருப்பதை நீங்கள் காணலாம்.

மூன்று எலுமிச்சைப் பழங்களை எடுத்துக் கொண்டு அதனை இரண்டு துண்டாக வெட்டி எடுத்து வீட்டின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். அப்படி வைக்கப்படும் எலுமிச்சம் பழங்கள் மஞ்சளாகவோ அல்லது கருமையாக மாறினால் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம். உடனே அதனை தூக்கி எறிந்துவிட்டு. அதே இடத்தில் புதிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக  வெட்டி வைக்க வேண்டும்.

ஒரு எலுமிச்சம் பழத்தை 4 பகுதியாக அறுத்து அதனை உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைக்க வேண்டும். இதனை, நீங்கும் தூங்கும் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில், அந்த எலுமிச்சை மற்றும் உப்பை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வெளியில் எறிந்துவிட வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை எடுக்கும் போது கையால் தொடக்கூடாது. இப்படி செய்வதன் மூலமாக வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலகிவிடும்.

தூய்மையான மழை நீரில் எலுமிச்சம் பழத்தின் தோலை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்தால் எதிர்மறை சக்திகள் அழிக்கப்பட்டு வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

பூஜையறையில் ஒரு டம்பளரில் எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். வீட்டு வரவேற்பறையில் டம்பளரில் 3 எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால் உறவுகள் பலப்படும். வேலை பார்க்கும் இட த்தில் மேஜையிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலுள்ள மேஜையிலோ 3 எலுமிச்சம் பழங்கள் வைத்துக் கொள்வது நன்மை அளிக்கும். அந்த எலுமிச்சம் பழங்கள் காய்ந்த தும் அதனை மாற்றிவிட வேண்டும். இப்படி செய்து வர நேர்மறை சக்தி அதிகரித்து செல்வ வளம் கூடும்.

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சம் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், ஒன்று மட்டும் நடுவில் இருக்குமாறு வைத்து மீதமுள்ளவற்றை அதனை சுற்றியே வைக்க வேண்டும். மேலும், அந்த பீங்கான் கூடையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.