வீட்டில் குளவி கூடு கட்டி இருந்தால் என்ன பலன்?

56

வீட்டில் குளவி கூடு கட்டி இருந்தால் என்ன பலன்?

குளவி நம்முடைய வீடுகளில் வந்து கூடு கட்டுவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால், எல்லோரது வீட்டிலும் குளவி கூடு கட்டி விடுமா? என்று கேட்டால் அது கொஞ்சம் சந்தேகம் தான். குளவி கூடு கட்டினால் என்ன பலன்? அந்த கூட்டை கலைக்கலாமா? கலைக்க கூடாதா? அந்த மண்ணில் இருக்கக்கூடிய அற்புத சக்தி என்ன? என்ன செய்தால் திரும்பவும் அந்த இடத்தில் குளவி கூடு கட்டாம இருக்கும்? என்பதைப் பற்றி விரிவான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குளவி கூட்டின் பலன்கள்:

வீட்டில் குளவி கூடு கட்டலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதன் மூலம் வீட்டிற்கு நன்மை தான் நடக்கும். சில வீடுகளில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அறிவுறுத்த குளவி கூடு கட்டும் என்று சொல்லப்படுவது. சில வீடுகளில் இருக்கும் பொருளாதார பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் கூட, குளவி அந்த வீட்டில் கூடு கட்டும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. ஆகவே, குளவி கட்டினால் வீட்டிற்கு நன்மை தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

குளவி கூட்டை கலைக்கலாமா?

வீட்டில் குளவி கட்டிய கூட்டை கலைத்து விடலாமா? என்று கேட்டால், அது தவறுதான். கூட்டை கலைக்க கூடாது தான். எந்த ஒரு கூட்டையுமே நாம் கலைக்கக் கூடாது. ஏனென்றால், ஒரு ஜீவன் வாழும் வீடு அல்லவா அது. நம் வீட்டை யாராவது வந்து உடைத்தால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதேபோல் தான் மற்ற ஜீவராசிகளுக்கும். அதை கலைக்கும் போது நமக்கு பாவம் சேரத்தான் செய்யும்.

இருப்பினும் குளவி கொட்டினால் விஷத் தன்மை, அதாவது குழந்தைகள் தாங்க மாட்டார்கள். வீங்கி விடும். பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் வீட்டின் உள் பக்கத்தில், குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல், குளவி கூடு கட்டி விட்டது. குழந்தைகள் தொடும் இடத்தில் அது இருக்கிறது என்றால், வேறு வழியில்லாமல், குளவி அந்த கூட்டில் இல்லாத சமயம் பார்த்து, அதை கலைக்க வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு ஏற்படும்.

அதை கலைத்து விட்டோமே ஆனால், அந்த இடத்தில் சிறிது கோமியத்தை விட்டுவிடவேண்டும். குளவி திரும்ப அந்த இடத்திற்கு வந்து கூட கட்டாமல் இருக்க, கோமியம் ஒரு நல்ல மருந்து என்று சொல்லப்பட்டுள்ளது.

குளவி கூட்டின் மண்:

அடுத்ததாக இந்த குளவியின் மண். குளவி கூடு கட்டுவதற்கு கால் படாத இடத்தில் இருக்கும் மண்ணை தான் எடுத்துக் கொண்டு வருமாம். அந்த மண்ணிற்கு அற்புத சக்தி உள்ளதாகவும், அந்த மண்ணை சிறிது எடுத்து தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் பொருளாதார சூழ்நிலை மேலோங்கும் என்றும் சில குறிப்புகள் உள்ளன. அதற்காக கூட்டில் இருந்து உடைத்து மண்ணை எடுக்க வேண்டாம்.

சில சமயம் கூட தானாக கீழே விழுந்து விடும். அப்போது, அதிலிருந்து சிறிது மண்ணை எடுத்து விபூதியில் கலந்து கொள்ளுங்கள். இல்லை என்றால், அந்த கூட்டிற்கு வெகுநாட்களாக குளவி வராமல் இருக்கும். அப்போது அந்த மண்ணை எடுத்துக் கொள்ளலாம். அந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஆக உங்கள் வீட்டில் குளவி கூடு கட்டினால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அந்த குளவி உங்களை கொட்டாத வரையில், எதிர்பாராமல் கொட்டிவிட்டது. என்ன செய்வது? சிறிதளவு சுண்ணாம்பு எடுத்து குளவி கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது.