வீட்டு பூஜையறையில் மயில் இறகு வைக்கலாமா?

82

வீட்டு பூஜையறையில் மயில் இறகு வைக்கலாமா?

முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனால், தான் என்னவோ மயிலின் இறகுகள் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக முருகனுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் காவடிகளில் மயிலிறகு வைத்திருப்பதையும், முருகன் கோயில்களில் மயில் இறகுகள் பயன்படுத்துவதையும் நாம் பார்த்திருப்போம்.

அப்படிப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட மயில் இறகுகளை நமது வீட்டில் வைக்கலாமா? அப்படி வீட்டில் வைப்பதன் மூலமாக தோஷங்கள் நீங்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். மயில் இறகுக்கு கண் திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீக்கும் சக்தி உள்ளது. வீட்டில் மயில் இறகுகளை வைப்பதால் நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது அனைவரது நம்பிக்கை. வீட்டில் 8 எண்ணிக்கையில் மயில் இறகுகளை வைத்தால் வாஸ்து தொடர்பான அனைத்து குறைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்த 8 மயில் இறகுகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு வெள்ளை நிற கயிற்றில் கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். தினந்தோறும் பூஜை செய்யும் போது ஓம் சோமாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் மாற்றங்கள் நிகழ்வதைக் காணலாம்.

உங்களது வீட்டில் எதிர்மறையான ஆற்றல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் வீட்டு வாசல் படியில் மயிலிறகை வைக்கலாம். மயில் இறகுகள் வைத்தால் பூச்சிகள் அண்டாது. வீட்டில் பணப்பெட்டி இருக்கும் இடத்தில் மயில் இறகு வைத்தால் செல்வம் அதிகரிக்கும்.

வீட்டு பூஜையறையில் மயிலிறகு வைத்து வணங்கி வழிபட்டு வந்தால் சனி பகவானால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். 3 மயிலிறகை ஒன்றாக வைத்து முருகப் பெருமான் மற்றும் அவரவர்களது குல தெய்வத்தை நினைத்து மனதார வேண்டி வந்தால் நீங்கள் செய்த பாவங்களிலிருந்து உங்களுக்கு பாவ விமோட்சனம் கிடைக்கும்.

மயில் இறகை வீட்டில் வைத்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வளவு ஏன், மயில் இறகு இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.