வெண் கடுகு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்! ஒரு குட்டி ஸ்டோரி!

222

வெண் கடுகு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்! ஒரு குட்டி ஸ்டோரி!

வெண் கடுகு கடவுள் தன்மையைக் கொண்டது. வெண் கடுகு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். மகத நாட்டை மயில்வண்ணன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடையாளி. தன் நாட்டு மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்து வந்தான். ஆனால், அவன் மீது பொறாமைக் கொண்ட அவனது எதிரிகள் அவன் மீது தீய சக்திகளை ஏவி விட்டனர்.

அதன் காரணமாக, மயில்வண்ணனால் தன நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அவனது குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போனது. இதையடுத்து, தனது ராஜகுருவை அழைத்து தனது கஷ்டங்கள் குறித்து முறையிட்டு அதற்கு பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் மன்னனுக்கு விசேஷ பூஜை செய்யுமாறு அறிவுரை கூறினார்.

பைரவர் பூஜை:

அதன்படி, 48 நாட்கள் ஒரு மண்டலம் பைரவருக்கு வெண் கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்ய வேண்டும். அதன், பின் சாம்பிராணி தீபத்தை ஏற்றி வைத்து அதன் தீபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்று கூறினார்.

வெண் கடுகை பயன்படுத்த என்ன காரணம்?

ஆனால் மன்னனோ எதற்காக பாத பூஜையிலும், சாம்பிராணி புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜகுரு, வெள்ளைக் கடுகு செடிகள் எப்போதும் குளிர்ச்சியை தரக்கூடியது. அவை இமய மலையைச் சுற்றி காவல் இருக்கும் பைரவரின் தேவ கணங்கள்.

மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள் (கடவுள்). இந்த உலகில் அனைத்து தீய சக்திகளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர். வெண் கடுகு உள்ள இடத்தில் எப்போதும் தீய சக்திகளால் இருக்கவே முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை விரட்டி அடிக்கும்.

சுதர்சன ஹோமங்கள்:

சுதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் ”சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய” என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே சுதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண் கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள்.

அது போன்று போர்களில் அடிபட்டு இறக்கும் நிலையிலுள்ள வீரர்கள் பூமியில் விழும்போது அவர்களை சுற்றியுள்ள இடங்களில் வெண் கடுகை தீயில் போட்டு புகை வரும்படி செய்தால் எமன் அவர்களது உயிர்களை பறிக்க வரமாட்டார். ஏனென்றால், வெண் கடுகுப் புகை சுதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பது. எனவே தான், வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ராஜகுரு கூறியதைப் போன்று மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகு கொண்டு பூஜை மற்றும் யாகம் செய்ய அனைத்து தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறின. மயில்வண்ணன் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது. நாட்டு மக்களுக்கும் மீண்டும் நன்மைகள் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.