வெளியில் செல்லும் போது எதிரில் பிணம் வந்தால் அபசகுனமா?

76

வெளியில் செல்லும் போது எதிரில் பிணம் வந்தால் அபசகுனமா?

நமது உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ யாரேனும் இறந்துவிட்டால், நாம், அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களோ நமது இறுதி மரியாதையை செய்வோம். மேலும், அவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவர்களை நல்லடக்கம் செய்ய மயானம் வரை நடந்து செல்வது வழக்கம். இதுவே நாம் வெளியில் செல்லும் போது யார் எவர் என்று தெரியாத ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது இறுதி ஊர்வலம் வந்தால், நல்ல வேளை இறந்தவர் யார் எவரென்றே தெரியாது என்று நிம்மதி கொள்ளலாம்.

இப்படி இறுதி ஊர்வலத்தில் செல்ல நேர்ந்தால் அதனை துக்கமாகவும், எதிரில் வந்தால் சற்று நிம்மதியுடனும் இருப்பது இயல்பு தான். இந்த மனநிலை தான் காலப்போக்கில் எதிரே பிணம் வந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லும் ஒரு பழக்கமாக மாறிவிட்டது. இனிமேல், இது போன்று சொல்லாமல் இருப்பதற்கே இந்தப் பதிவு. மேலும், தெரிந்தோ, தெரியாமலோ நமக்கு எதிரில் பிணம் வந்தால் ஒரு நிமிடம் அவர்களது ஆத்மா சாந்தியடைய நமது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு செல்லுங்கள்…

இதையும் படிங்க: வீட்டிற்கு முன் காகம் வந்து கரைந்தால் விருந்தினரகள் வருவார்களா?

மேலும் தெரிந்து கொள்ள: விதவைப் பெண் எதிரில் வந்தால் அபசகுனமா?