வெளியில் செல்லும் போது மனைவி கையால் இதை வாங்கி சென்றால் வருமானம் சூப்பரா இருக்கும்!

118

வெளியில் செல்லும் போது மனைவி கையால் இதை வாங்கி சென்றால் வருமானம் சூப்பரா இருக்கும்!

யாராக இருந்தாலும் இன்றைய காலகட்ட்த்தில் காசு, பணம் இல்லையென்றால் வாழ முடியாது என்ற இக்கட்டான சூழலுக்கு வந்துவிட்டோம். காசு, பணம் தான் முக்கியம் என்ற மன நிலையும் வேறு. பணம் சம்பாதிப்பதற்காகவே நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அன்றாடம் காசுக்கு கஷ்டப்படுகிறவர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அன்றாட செலவுகளை சமாளிக்க அனுதினமும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மாதம் ஒரு முறை வாங்கும் சம்பளத்தை வைத்து தான் மொத்த மாதத்தையும் ஓட்டியாக வேண்டும். ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல உத்தியோகமும், தொழிலும் சமமான தராசில் தான் நிற்கிறது. மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று இருப்பவர்களும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர்.

மனைவி என்பவள் தான் லட்சுமியின் அம்சமாக இருக்கிறாள். அந்த மனைவியானவள் தினந்தோறும் கணவன் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பொழுது சரியாக வழி அனுப்பும் முறையை பின்பற்ற வேண்டும். இந்த முறையில் அவர்களை வழி அனுப்பி வைத்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும். அது என்ன என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

என்னதான் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை இருந்தாலும், கணவன் வெளியில் சம்பாதிக்க செல்லும் போது அவர்களை புன்னகை முகத்துடன் வழி அனுப்பி வைத்தால் அவர்களுக்கு வெற்றி உண்டாகும். பெண்கள் கோயிலுக்கு சென்று வரும் போது கையில் விபூதி, குங்கும்ம் ஆகியவற்றை வீட்டிற்கு பிரசாதமாக கொண்டு வருவீர்கள் அல்லவா, அதையெல்லாம் அப்படியே வீட்டு பூஜையறையில் நீங்கள் வைத்திருக்கும் விபூதி, குங்குமம் இருக்கும் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

கணவன் வெளியில் செல்லும் போது, மனைவி தனது கையால் ரூபாய் நோட்டு கொடுத்து விட்டால் அன்றைய நாள் வருமானம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். தினந்தோறும் குறைந்தது 10 ரூபாயாவது கணவனுக்கு கொடுத்து விட வேண்டும். அல்லது அவரது பாக்கெட்டில் வைத்து வழி அனுப்ப வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வருமானம் சிறப்பாக அமையும்.

ஒரு சில வீடுகளில் வரவு, செலவு கணக்குகளை பார்ப்பது கணவனாக இருப்பார்கள். ஆனால், அதனையெல்லாம் மனைவி கைகளில் கொடுத்துவிட்டால் சுபீட்சம் உண்டாகும்.  கணவன் வரவு, செலவு கணக்கு பார்த்தால் மனைவிக்கு, கணவன் படும் கஷ்டம் புரியாது. மனைவி அதனை ஏற்கும் பொழுது தான் அந்த வீட்டில் செல்வமும் கொழிக்கும். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை மனைவியிடம் கொடுத்து விட்டு உங்களுக்கு தேவையான பணத்தை மனைவியின் கையால் வாங்கிக் கொண்டு செல்வதும், கணவனுக்கு என்ன தேவை? என்பதை அவன் கேட்காமலேயே மனைவி அதை நிறைவேற்றுவதும் சிறந்த தம்பதிகளாக வாழ வழி வகுக்கும்.

ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் அந்த வீட்டில் இது உன்னுடைய பணம்! இது என்னுடைய பணம் என்ற பாகுபாடு இல்லாமல் நம்முடைய பணம் என்கிற மனப்பான்மை இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும்.