வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !

412

*ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தின் பெருமைகள்:*

கலி சந்தாரன உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளதாவது: “கலியுகத்தின் தீய விளைவுகளை எதிர்க்கக்கூடிய ஒரே வழி 32 அசைகளுடன் கூடிய இந்த 16 பெயர்களே ஆகும். அனைத்து வேதங்களிலும் தேடினாலும், ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்து தியானிப்பதைத் தவிர வேறு மிகச் சிறந்த வழியை ஒருவரால் கண்டுபிடிக்க முடியாது”.

பிருஹத் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் மற்றும் ப்ரஹ்மாண்ட புராணத்தின்படி, ராமா என்ற பெயரானது 1000 விஷ்ணுவின் பெயர்களுக்கும், மூன்று ராமாவின் பெயர்கள் ஒரு கிருஷ்ணரின் பெயருக்கும் சமமாகும்.

ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தில், நான்கு கிருஷ்ணரின் பெயர்கள் உள்ளன.
4 கிருஷ்ணர்கள் = 4 * 3 = 12 ராமர்கள்.
மந்திரத்தில், இன்னும் 4 ராமர் பெயர்கள் உள்ளன.
அதனால், 12 + 4 = மொத்தம் 16 ராமர்கள்.
1 ராமர் = 1000 விஷ்ணுக்கள் (ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திற்கு சமம்).
16 ராமர்கள் = 16 * 1000 = 16,000 விஷ்ணுக்கள்.
ஆக, ஒரு மகா மந்திரம் = 16,000 விஷ்ணுக்கள் (16 முறை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திற்கு சமம்).

16 முறை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல, கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரங்கள் ஆகும். ஆனால், ஒரு முறை ‘ஹரே கிருஷ்ணா’ மகா மந்திரத்தினை சில நொடிகளிலேயே சொல்லி, அதே பலனை எளிதாக அடையலாம்.

ஒரு ஜெப மாலையில் 108 முத்துக்கள் உள்ளன.
ஆகையால், ஒரு ஜெப மாலை = 108 * 16000 = 17,28,000 விஷ்ணுக்கள்.
16 சுற்று ஜெப மாலை = 17,28,000 * 16 = 2,76,48,000 விஷ்ணுக்கள்.

ஓம் நமோ நாராயணாய !