16 செல்வங்களுக்கு மகாலட்சுமி வழிபாடு!

120

16 செல்வங்களுக்கு மகாலட்சுமி வழிபாடு!

திருமணமான தம்பதிகளை முன்னோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள் என்று அனைவருமே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது உண்டு. ஏன், அப்படி சொல்கிறார்கள்? 16 செல்வங்கள் என்னென்ன? 16 செல்வங்களை பெறுவதற்கு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று இங்கு பார்ப்போம்…

16 செல்வங்கள்:

கல்வி, புகழ், வலி, வெற்றி, பெருமை, இளமை, வாழ்நாள் (ஆயுள்), நோயின்மை, அறிவு, அழகு, நல்லூழ் (விதி), நுகர்ச்சி, நன் மக்கள், துணிவு, நெல், பொன் – ஆகியவை ஆகும்.

இந்த 16 வகையான செல்வங்களை செல்வங்களை அள்ளித்தருபவள் ஸ்ரீ லட்சுமி தேவி தான். தற்போது லட்சுமி தேவியின் வடிவங்களையும், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிவில் காண்போம்…

16 வகையான லட்சுமி தேவிகள்:

சௌபாக்கிய லட்சுமி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, கீர்த்தி லட்சுமி, ஆரோக்கிய லட்சுமி, ஆதிமஹா லட்சுமி, சாயா லட்சுமி, சக்தி லட்சுமி, தான்ய லட்சுமி, த்ருஷ்ணா லட்சுமி, சாந்த லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, சாந்தி லட்சுமி, வர லட்சுமி, காருண்ய லட்சுமி

 1. சௌபாக்கிய லட்சுமி: பிறரை சிரிக்க வைத்து பார்க்கும் குணம் கொண்டவர்களுக்கு சௌபாக்கிய லட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்கும்.
 2. விஜய லட்சுமி: விடா முயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பும் இந்த மூன்றும் இருந்தால் விஜயலட்சுமியின் அருள் கிடைக்கும்.
 3. சந்தான லட்சுமி: அன்பு காட்டுவதில் தாயை சிறந்தவள் யாருமில்லை. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுபவர்களுக்கு சந்தான லட்சுமி அருள் புரிவாள்.
 4. கீர்த்தி லட்சுமி: கீர்த்தி, பேர், புகழ் ஆகியவற்றிற்கு ஆசைப்படாதவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. எந்த செயலையும் உள்ளன்போடு மன நிறைவாக செய்து வந்தால், கீர்த்தி லட்சுமியின் அருளால் பேரும், புகழும் பெறலாம்.
 5. ஆரோக்கிய லட்சுமி: சொல், செயல், நல்ல எண்ணம் இருந்தால் போதும் எப்போதும் ஆரோக்கியமாக வாழலாம். நல்ல எண்ணம் இருந்தால், நல்லதே நடக்கும். காமம், கோபம், பொறாமை, பேராசை போன்ற எதிர்மறை எண்ணங்களை மறந்து நல்ல எண்ணத்தோடு வாழ ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.
 6. ஆதிமஹா லட்சுமி: மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆதிமஹா லட்சுமியின் கருணையால் நமக்கு எந்த குறையும் வராது. செல்வங்களை வாரி வழங்குவாள்.
 7. சாயா லட்சுமி: கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற பழமொழிக்கேற்ப, வாழ்பவர்களுக்கு சாயா லட்சுமி அருள் புரிவாள்.
 8. சக்தி லட்சுமி: தன்னம்பிக்கையோடு, எந்த வேலையையும் செய்து முடிக்கும் குணம் படைத்தவர்களுக்கு சக்தி லட்சுமியின் அருள் உண்டு.
 9. தான்ய லட்சுமி: தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பது அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்து வாழ்ந்து வந்தால் தான்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
 10. த்ருஷ்ணா லட்சுமி: எப்போதும் ஆன்மீக எண்ணத்தோடு த்ருணா லட்சுமியை வழிபாடு செய்தால் நலம் உண்டாகும்.
 11. சாந்த லட்சுமி: அமைதியின் சுயரூபமாக விளங்கக் கூடியவர்களுக்கு சாந்த லட்சுமி அருள் பாலிப்பாள்.
 12. வித்யா லட்சுமி: உற்றா, உறவினர்களிடம் அன்பாக பேசி பழகி நமது புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தினால், வித்யா லட்சுமியின் அருள் கிடைக்கும்.
 13. தன லட்சுமி: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து, இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தால், தன லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
 14. சாந்தி லட்சுமி: ஓம் சாந்தி சாந்தி சாந்தி…வாழ்க்கையில் படும் இன்ப துன்பங்களை சமமாக பிரித்து வாழ்பவர்களுக்கு சாந்தி லட்சுமியின் ஆசி எப்போதும் உண்டு.
 15. வர லட்சுமி: உடலில் ரத்த ஓட்டம் நிற்கும் போதும், நாடி நரம்பெல்லாம் அடங்கி ஒடுங்கும் போதும் தான் வர லட்சுமியின் கருணை வேண்டும். நாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட பாவ விமோட்சனம் கிடைக்க நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமுருகி வரலட்சுமியை வேண்டினால், நலம் உண்டாகும்.
 16. காருண்ய லட்சுமி: அனைத்து உயிர்களிடம் கருணை உள்ளத்தோடு பழக வேண்டும். அப்படி செய்தால், காருண்ய லட்சுமியின் கருணை நமக்குக் கிடைக்கும்.