16 வகையான தீபங்கள் என்னென்ன தெரியுமா?

157

16 வகையான தீபங்கள் என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மற்றும் ஆங்கில மாதம் என்று ஒவ்வொரு மாதமும் முக்கியமான நாட்கள், விரத தினங்கள் இருக்கும். அதோடும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் என்றாலே ஐயப்பன் மற்றும் முருகப் பெருமானுக்கு மாலை அணிவதற்குரிய முக்கியமான மாதங்களாக கருதப்படுகிறது.

கார்த்திகை மாதம் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதம் ஆன்மீக வழிபாடு அதிகமாகவே இருக்கும். திருக்கார்த்திகை தீபம், கால பைரவராஷ்டமி ஆகிய முக்கிய விரத தினங்கள் உள்ளன. இந்த மாதம் திருமணம் அதிகளவில் நடைபெறும். இந்த மாதத்தை திருமண மாதம் என்றும் கூட சொல்வார்கள்.

கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நீராடி, சிவன் – விஷ்ணுவுக்கு பூஜைகள் செய்து வீட்டில் எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதீகம். தீபங்களில் எத்தனை வகைகள் இருக்கிறது? அது என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

 1. தீபம்
 2. மகா தீபம்
 3. கணு தீபம்
 4. மேரு தீபம்
 5. வியான் தீபம்
 6. சிம்ம தீபம்
 7. மயூர தீபம்
 8. ஐந்தட்டு தீபம்
 9. துவஜ தீபம்
 10. புருஷா மிருக தீபம்
 11. ஓல தீபம்
 12. அலங்கார தீபம்
 13. நட்சத்திர தீபம்
 14. கமடதி தீபம்
 15. நாக தீபம்
 16. விருட்சப தீபம்

என்று தீபங்கள் 16 வகைகள் உண்டு.