7ஆவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்யப்படுகிறது?

163

7ஆவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்யப்படுகிறது?

கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் ஒரு சடங்கு. இதனை வளைகாப்பு அல்லது சீமந்தம் என்று அழைப்பார்கள். பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி 5ஆவது மாதத்திலோ அல்லது 7ஆவது மாதத்திலோ அல்லது 9ஆவது மாதத்திலோ வளைகாப்பு செய்வார்கள்.

வளர்பிறையில் நல்ல நாள் பார்த்து, அதிகாலையில் தட்டுகளில் வளையல்கள், பூ, பழங்கள் மற்றும் மங்கள பொருட்கள் வைத்து கருவுற்ற பெண்ணிற்கு வளையல் அணிவிக்கும் நிகழ்வு நடக்கும். வளையல் அணிவிக்கும் முன், வேப்பிலையில் காப்புப் போன்று செய்து முதலில் கையில் போடுவார்கள். அதன் பிறகு பூச்சூடுவார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு சுமங்கலி பெண்ணாக வந்து கருவுற்ற பெண்ணிற்கு மஞ்சளிட்டு, குங்கமம் இட்டு, வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்துவார்கள். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் போது கருவுறாத பெண்ணுக்கு துணை காப்பு போடுவார்கள். பெண்ணின் ஒரு கையில் இரட்டைப்படை எண்ணிக்கையிலும், மற்றொரு கையில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலும் வளையல் போடுவார்கள். கடைசியாக அனைவருக்கும் 7 வகையான சாதம் பரிமாறுவார்கள்.

கருவுற்ற பெண்களுக்கு வளையல் போடுவதன் மூலமாக மிக எளிதாக பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். தாயின் கையில் அணியப்படும் கண்ணாடி வளையலின் சத்தமானது குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கவும் செய்கிறது.

ஒரு சில வீடுகளில் 5ஆவது மாத த்தில் வளைகாப்பு நடத்துவார்கள். ஒரு சில வீடுகளில் 7ஆவது மாதம், இன்னும் சில வீடுகளில் 9ஆவது மாதம் என்று வளைகாப்பு நடக்கும். 7ஆவது மாதத்தில் நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து கருவுற்ற பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். ஏனென்றால், 7ஆவது மாதத்திற்கு பிறகு கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.

ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் இருவரும் உறவில் ஈடுபட்டால் கருவில் இருக்கும் குழந்தை திரும்பிக் கொள்ளும். அதோடு, மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏழாவது மாதம் 3ஆவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம் என்பதால், இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

வளைகாப்பு நிகழ்ச்சியின் போது உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 7 வகையான உணவு சமைத்து கர்ப்பிணி பெண்ணிற்கு ஊட்டி விட்டு, ஆசீர்வாதம் செய்வார்கள். இதன் காரணமாக, கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தைக்குதேவையான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறும். இந்த காலகட்டத்தில் கருவுற்ற பெண் உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த 7ஆவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி கணவன் மனைவி இருவரையும் பிரித்து விடுகிறார்கள்.