7 குதிரைகள் படத்தை வீட்டில் வைக்கலாமா?

133

7 குதிரைகள் படத்தை வீட்டில் வைக்கலாமா?

பூஜையறையில் வைக்கப்படும் சாமி படங்களைத் தொடர்ந்து ஒரு சில படங்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும் சக்தி அதிகம் உண்டு. இன்னும் சில படங்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. கண் திருஷ்டிக்கு கணபதி இருக்கிறார். இது போன்ற படங்களை உங்களது வரவேற்பையில் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்.

அந்த வகையில், 7 குதிரைகள் கொண்ட புகைப்படத்தை வீட்டில் வைக்கலாமா? வைக்க கூடாதா? என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம். சூரிய பகவானின் வாகனமாக இருப்பது 7 குதிரைகள் பூட்டிய தேர். சுக்கிர பகவானின் வாகனம் வெள்ளை குதிரை. விநாயகப் பெருமானுக்கு யானை எப்படி விசேஷமானதோ அதே போன்று வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்க வெள்ளை குதிரை மிகவும் விசேஷமானது.

மகாலட்சுமி வாசம் செய்வதும் குதிரையில் தான். 7 குதிரைகள் பொருத்தப்பட்ட ரதங்களில் வளம் வரும் சூரிய பகவான் அனைத்து வளங்களையும் கொடுக்க கூடியவர். இல்லற வாழ்க்கையில் இனிமை காண்பதற்கு சுக்கிர பகவானின் அருள் வேண்டும். சுக்கிர பகவான் களத்திர காரனாக விளங்குவதால், சுக்கிர பகவானுடைய அருள் இல்லாமல் நல்ல கணவன் – மனைவி அமைவது என்பது மிகவும் கடினம்.

நல்ல கணவன் – மனைவி அமைந்து இல்லற வாழ்க்கையில் சிறந்து விளங்க சுக்கிர பகவானின் வாகனமாக விளங்கும் குதிரைகள் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது நல்ல பலன்களைத் தரும். இதில், 7 குதிரைகள் இருக்கும் படங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. 7 குதிரைகள் படம் இல்லையென்றாலும் ஒரேயொரு வெள்ளைக் குதிரை இருக்கும் படத்தைக் கூட வீட்டில் மாட்டி வைக்கலாம். இதனால் கூட அதிர்ஷ்டம் கூடும்.

தினந்தோறும் தூங்கி எழுந்த தும் நாம் நமது உள்ளங்கையை பார்த்து எழுந்திருக்க வேண்டும். உள்ளங்கையில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. உள்ளங்கையை பார்த்த பின்னர், 7 குதிரைகள் ஓடுவது போன்று இருக்கும் குதிரை படத்தையோ அல்லது ஒரேயொரு வெள்ளை குதிரை படத்தையோ பார்த்துவிட்டு அதன் பிறகு வேலைகளை தொடங்கினால், நாள் முழுவதும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் விருத்தியாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

குதிரை பட த்தை கிழக்கு – தென் கிழக்கு – வடக்கு ஆகிய திசைகளில் அனைவரும் பார்க்கும்படியாக வைக்க வேண்டும். இதன் மூலமாக அந்த வீட்டில் செல்வம் பெருகும். குதிரை படங்கள் தவிர வீட்டின் வரவேற்பறையில் கழுதை படம், கோமாதா படம், வாத்திய இசைக் கருவிகளின் படம், மகாலட்சுமியின் படம் ஆகியவற்றை வைக்கலாம். இதன் மூலமாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் தடுக்கப்படுவதோடு, தரித்திரம் முற்றிலுமாக நீங்கும்.