அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல.

165

நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு கோதுமை மாவு, பச்சரிசி மாவு, ஜவ்வரிசி மாவு, கடலை மாவு இப்படி எந்த மாவிலும் கோலம் போட்டு பிரயோஜனமில்லை. மஹாபெரியவா என்ன சொல்லியிருக்கார்னு கொஞ்சம் படிச்சு பாருங்க.

//அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.//

“நமக்கு ரொம்ப துக்கமோ, கஷ்டமோ வரச்சே, அம்பாள் பேர்ல கோபம் வர்றது ஸஹஜம். அம்பாள் நம்மள தண்டிச்சு கஷ்டம் குடுக்கற மாதிரி தோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை மட்டும் விட்டுடக்கூடாது! இன்னும் ஜாஸ்தியா நம்பிக்கை வெக்கணும். செல ஸமயம் அம்மா கொழந்தையை கோவிச்சுக்கறா.! ஓங்கி ரெண்டு அடி கூட வெக்கறா !

அப்போ, கொழந்தை நெஜமா துக்கப்படறது!… ‘ஓ’!-ன்னு அழறது…! ஆனா, ஒடனே எந்த அம்மா அடிச்சாளோ… அவகிட்டயேதான் அது போறது… அடிச்ச கையையே பிடிச்சிக்கறது. அவளோட காலையே கட்டிண்டு அழறது…

….அதுமாதிரி, அம்பாளோட கொழந்தேளான நாமளும், துக்கம் வந்தா… அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தை குடுத்தா-ன்னு நெனச்சா… “எனக்கேம்மா இந்த தண்டனையைக் குடுத்தே? என்னால தாங்க முடியலியே ! ஒன்னை விட்டா… எனக்கு வேற யாரு இருக்கா?..” ன்னு அவ பாதத்தையே பிடிச்சிண்டு அழணும்.! மறுபடியும் அவகிட்டதான் போயாகணும்! வேற வழியே இல்ல!…”

இன்னும் 15 நாள் நாம வீட்டுக்குள்ள தான் முடங்கி கிடக்கணும். இன்னிக்கு வரைக்கும் எப்படியோ நாட்களை செலவழிச்சிட்டோம். இன்னும் இரண்டு வாரம் தானே. இனிமேலாவது இந்த எஞ்சியிருக்கும் நாட்களில் நமக்கு தெரிந்த ஸ்லோகங்களை இரண்டு வேளையும் சொல்லலாமே. சொல்லத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை ஆடியோவில் ஒலிக்க விட்டு கேட்டுக் கொண்டாவது இருக்கலாமே.