அர்த்தமுள்ள இந்துமதம் – நல்லவன் வாழ்வான்

152

ஒரு சாமானியனுக்கு இருக்கும் இயல்பான கேள்விகளை முன்னிறுத்தி இருக்கிறார்.

எவ்வளவு தான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், ஒழுக்கமாக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம் என்பது வந்துதான் தீரும். அது சரி தான்.

ஆனால், நாணயம் / நேர்மை / ஒழுக்கம் / மரியாதை கெட்டவன் இவனெல்லாம் உற்சாகமாகவும், வசதியாகவும் வாழுகிறானே, அதுவும் நீண்ட காலம் வாழுகிறானே, “எப்படி”.

“நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை! எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?” என்று கலங்குவோர் உண்டு.

“நான் தினமும் கோயிலுக்குப் போகிறேனே, ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கிறான்? என்று வருந்துவோர் உண்டு.

“நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; யாருடைய குடும்பத்தையும், நிலத்தையும் அபகரித்ததில்லை; நான் படாதபாடும் இல்லை” என்ற ஆதங்கப் படுவோர் உண்டு.

நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதை விட, தீயவர்கள் வாழுகிறார்களே, அது எப்படி?

என்று கர்மா குறித்து விளக்கமாக இந்த அத்தியாயத்தில் எழுதி இருக்கிறார்.

இவர் துவக்கத்தில் இருந்து கூறும் கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்த அத்தியாயத்தை ஆர்வமுடன் படிப்பார்கள்.

இவை ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கும் கேள்விகள், மதங்கள் கடந்து.

சில ஆணாதிக்கக் கருத்துகளைத் தவிர்த்து விட்டுப் படித்தால் சிறப்பான புத்தகம்.

இந்து மதத்தில் “வர்ணாசிரமம்” என்ற ஒரு விசயம் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், உலகிலேயே மிகச் சிறந்த மதமாக இருந்து இருக்கும்.

வர்ணாசிரமத்தால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறது.

பகவத் கீதைப் படி கூறுவதென்றால்…

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

காரணமில்லாமல் காரியமில்லை.

இந்து மதத்தை மதம் என்று கூறுவதை விட “வாழ்வியல் முறை” என்று கூறுவது தான் சரி.