ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள்

139

மங்கல காரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்; இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்ய அருளுவார் திருமால்.
🌹 ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருவது உண்டு. வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என இரண்டு ஏகாதசிகள் உண்டு. ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள்.
🌹 ஏகாதசி நாளில் விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் உண்டு. ஏகாதசி அன்று பெருமாளை வீட்டிலோ ஆலயம் சென்றோ வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள். ஏகாதசி திதி நாளில், பெருமாளை வணங்கி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி துளசி தீர்த்தம் பருகினாலே மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம்.
🌹 ஏகாதசியிலும் துவாதசியிலுமாக விரதம் மேற்கொள்வார்கள். இந்தநாளில் உணவே எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. மகாவிஷ்ணுவின் திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
🌹 🌹 பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரும் ஏகாதசி ஜெய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.🌹🌹
🌹 ஏகாதசி நாளில்… அரங்கனை, அனந்தனை, நம் ஆயுளெல்லாம் காத்தருளும் ஏழுமலையானை, திருவரங்கனை, குணசீலனை… ஒப்பற்ற பெருமாளை வணங்குவோம். சகல செளபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் தந்தருள்வான் வேங்கடவன்.
🌹 ஏகாதசி நாளில், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். ஒலிக்கவிட்டுக் கேட்போம். சங்கடங்களையெல்லாம் போக்கி அருளுவார்