குரு வாரம்… குரு தரிசனம்

204

மலரினும் மென்மையான குருவின் பாத கமலங்களை சரணாகதி பண்ணுவோம்….

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார்.

அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம்.

தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம்.

ஆனால் குரு பக்தியால் மட்டுமே பிறப்பற்ற நிலையை எய்தமுடியும்…

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை.

அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது.

ஆனால் அழியாத சொத்தான ‘ஞானத்தை’ நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?……குருவால் மட்டும்தான் முடியும்.

குருவிடம் இருப்பது எப்பொழுதும் யாராலும் அழிக்க முடியாத ஞானப் பொக்கிஷம்….

எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு ‘அவ்யாஜ கருணாமூர்த்தி’ என்றே ஒரு திருநாமமும் உண்டு.

தனது அக வாழ்விற்கு வழிகாட்டித் தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமை நன்னாள்….

குரு ” என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ”

” இருளை விலக்குபவர் ” என்று பொருள்.

குருநாதருக்கு ஆத்மார்த்த சமர்ப்பணம்..

எங்கும் நீக்கமற நிறைந்திருந்து ….

நம்மை என்றும் வழிநடத்திக் கொண்டிருக்கும் குருவின் நல் ஆசியோடு தொடரட்டும் நம் பயணம் …

ஸ்ரீ குருப்யோ நமஹ!!