இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஆறாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

95

மாலே! மணிவண்ணாவுன் ஆருயிர் மைத்துனன்
மூலமா முதல்வன், சங்கரன், படையேயின்றி
ஜாலமாய் வந்திங்கு எங்களைக் காக்குமந்தக்
கோலமே கண்டாயோ? எம்முடன் காஞ்சிவந்து
ஆலமே உண்டவாயன் காவியே பூண்டுவந்து
ஓலமிட்டழுது நின்ற மாந்தரை அணைத்துத் தாயைப்
போலக்காத்தன்பு ஊட்டி அருள்மழை பெய்யுமந்த
சீலமே காணவாராய்! அவன்பதம் சரண்புகுந்தோம்! (26)