சுந்தர ரூபத்தில் எனக்கு காட்சி தந்தாய் அம்மா

47

சுவர்க்கமாக நான் என் வாழ்க்கையை அனுபவிக்க அருளினாய்
சுலபமாக உனை நான் எதற்கும் எந்த வேளையிலும் அணுகுகிறேன்
சுடர் விடும் விளக்கில் உன் பிம்பத்தை கண்டேன் தாயே
சுரங்கமாக இருக்கும் என் மனதில் நீ சதா இருப்பதால் ஜோதியாக ஜ்வலிக்கிறது
**சுற்றி சுற்றி **குழந்தை போல் உனையே சுற்றி வருகிறேன்
**சுற்றி சுற்றி **எனக்கு தொல்லை தரும் மன, தேக கஷ்டங்களை நீக்கிடுவாய்
தனுர் மாதத்தில் வந்த இன்று ஆங்கில புத்தாண்டில் உனை போற்றி பாடுகிறேன்
காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி , காசி விசாலாக்ஷி,
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா
உன் அருள் என்றும் நிலை பெற வேண்டும் நீ வருவாயம்மா
பொன், பொருள் எல்லாம் வழங்கி வாழ்த்திடுவாய் அம்மா
நின் முகம் கண்டேன் என் முகம் மலராய் மலர்ந்தது ஏன் அம்மா
நீ எனக்கு அமுதூட்டும் தாய் என்பதால் தானே அம்மா !