குலதெய்வம்

168

 

ஒரு மனிதன் வாழ்வில் வணங்க வேண்டிய முதல் தெய்வம் அவரவருடைய குலதெய்வம்

இன்று நிறைய பேர் குலதெய்வ வழிபாட்டை ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தியிருப்பார்கள்
மதம் மாறிச் செல்வது முன்னோர்கள் வழி காட்டாமல் இருப்பது போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் குலதெய்வவழிபாடு
தடை பட்டிருக்கும் அப்படி இருப்பவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் முதலில் அவரவர் குல தெய்வங்களை கண்டுபிடித்து மீண்டும் வணங்க தொடங்குங்கள்

உங்களது எப்பேர்பட்ட பிரச்சினைகளும் நொடிப்பொழுதில் விலகும் குலதெய்வத்தை பற்றிய ஞானம் இல்லாததால் வழிபாடு விடப்பட்டிருக்கும், அதனால் உங்களது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்,

குலதெய்வங்கள் ஏவல் தெய்வங்கள் அல்ல

அதனால் குலதெய்வத்திடம் வேண்டும் பொழுது எனக்கு வசதி வேண்டும் வீடு வேண்டும் கார் பங்களா வேண்டும் என கேட்கக் கூடாது

குலதெய்வத்திடம் வைக்க வேண்டிய ஒரே வேண்டுதல் எனது குடும்பத்தை உனது காலடியில் சமர்ப்பிக்கிறேன்
என் குலம் தழைக்க அருள் தருவாய் என வேண்டினால் போதும் வேறு எதுவுமே தேவையில்லை

உங்களுக்கு தேவையானதை உங்களது குலதெய்வம் பார்த்துக்கொள்ளும்

நமது முன்னோர்களில் ஒருவரே நமது குல தெய்வமாக இருப்பார்