குறை ஒன்றும் இல்லை இல்லை கோவிந்தா!

243

 

பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, “”குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்” என்றார்.

குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,””தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?” என்று கேட்டார்.

அந்த நபரோ, “”பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை…?”என்றார்.

உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், “”எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!” என்றார்.

வந்தவர்,””கோவிந்தா! கோவிந்தா!” என்றார்.

பக்திமான் ஏமாற்றத்துடன்,””இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?” என்றார்.

குரு அவரிடம்,””நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை.

ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம்.

திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட “கோவிந்தா’ என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்” என்றார் குரு. பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/