மரண யோகத்தில் நற்காரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே இது சரியா ?

121

பஞ்சாங்கத்தின் உறுப்புக்கள் 5 திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இங்கே யோகங்கள் என்று குறிப்பிடப்படுபவை அமிர்த யோகங்கள் அல்ல 24 நட்சத்திரங்களைப் போல் 24 விதமான யோகங்கள் உண்டு. அமிர்தயோகம் சித்தயோகம் மரணயோகம் என்று இந்த மூன்றையும் அந்த யோகங்கள் குறிப்பிடுபவை அல்ல. சரி, இந்த மூன்று யோகங்களும் எப்படி கணக்கிடப்படுகிறது ? அது அன்றைய கிழமை மற்றும் நட்சத்திரத்தின் இணைவின் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது .

உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணையும் நாளில் சித்தயோகம் என்று குறிப்பிடப்படும் ஞாயிறு அன்று மகம் நட்சத்திரம் வரும் நாளில் மரணயோகம் என்று குறிப்பிடப்படும் அந்த அட்டவணையில் அட்டைவனை அடிப்படையில்தான் காலண்டரில் அமிர்தயோகம் சித்தயோகம் மரணயோகம் என்று குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் இந்த மூன்று யோகங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் உள்ளதால் இதை அனுசரித்து தான் திருமணம் கிரகப்பிரவேசம் முதலான நிகழ்வுகளை தவிர்க்கிறார்கள் மரணயோகம் வந்தால் திருமணம் கிரகப்பிரவேசம் தவிர்த்து சுபநிகழ்ச்சிகள் செய்வதில் எந்தவித தவறும் இல்லை.