மறுபிறவி உண்டா??

321

இன்று ஆன்மீக அன்பா்களின் மிகப்பொிய நம்பிக்கை மறுபிறவி என்பது ஒன்று உண்டு என்று

ஆம் மறுபிறவி என்பது உண்டு .

எதற்காக மறுபிறவி எடுக்க வேண்டிய நிலை வருகிறது .

மறுபிறவி அறுத்த நிலையை சித்த நிலையால் மட்டுமே அடைய முடியும் .

ஆம் உடலை விட்டு உயிரான ஆன்மா பிாிந்தால் மீண்டும் வேறு உடலை அடைந்தே தீரும் .

ஆனால் இந்த உயிரான ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொண்டு சமாதி அற்றநிலை பெறும் சித்த நிலையே மறுபிறவி அற்ற நிலை .

அப்படி மறுபிறவி அற்றசித்த நிலையை பெற்ற அனைவருமே மீண்டும் பிறாவா நிலை பெற்றவா்கள் ஆகிறாா்கள் .

இவா்கள் தங்கள் உயிரான ஆன்மாவை மட்டுமல்ல உடலையும் அழிவில்லாநிலைக்கு மாற்றி கொள்கிறாா்கள் .

இந்த நிலை பற்றற்ற நிலையாகும்.

ஏதாவது ஒன்றின் மீது பற்று இருந்தாலும் அப்பற்றை அறுக்க மீண்டும் பிறவி எடுக்கும் நிலை உருவாகும் .

ஆகவே மறுபிறவியே இல்லை என்பா்களும் முக்தி அடையபோகிறவா்களும் சித்த நிலையில் சிவகதி அடைந்தால் மட்டுமே சாத்தியம் .

எனவே கிடைத்த பிறவியை பற்றறுக்க பயன்படுத்தி வரும் பிறவிகளில் சித்த நிலையை அடைந்து முக்தி என்னும் பிறவா நிலை அடைவோம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்…