ஓம் நமோ நாராயணாய

116

ஒரு முறை கைலாயத்தில் பரமேஸ்வரனிடம் ஸ்வாமி கலியுகத்தில் ப்ரத்யஷ பலனை தரும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாமர மக்களும் எப்படி பாராயணம் செய்ய முடியும் என்றாள் அந்த தயாபரி.
அதற்கு சிவபெருமான்!
தேவி அதற்கும் ஒரு உபாயம் உள்ளது.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும்
ஈஸ்வர உவாச:
*ஸ்ரீராம ராம ராமேதி*
*ரமே ராமே மனோ ரமே*
*சஹஸ்ர நாம* *தத்துல்யம்*
*ராம நாம வரானனே*
என்ற ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்தாலே விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் அடைவார்கள் என்றார்.
மகிழ்ந்தாள் அம்பிகை.
சரி, இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை எங்கே பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம் !!
நம் வீடுகளில் பாராயணம் செய்தால் !! 100 விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலனும் .
வில்வமரம் மற்றும் அரசமரம் நெல்லி மரத்தடியில் பாராயணம் செய்தால் 1000 தடவை சொன்ன பலனும்
ஆற்றங்கரையில் பாராயணம் செய்தால் லட்சம் தடவை சொன்ன பலனும்
சமுத்திரம் இருக்கும் இடத்தில் பாராயணம் செய்தால் பல லட்சம் தடவை சொன்ன பலனும்.
[கோசாலை] பசுக்கள் நிறைந்து இருக்கும் இடத்தில் பாராயணம் செய்தால் பலகோடி முறை சொன்ன பலனும் .
பல யுகம் கண்ட சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆலயங்களில் பாராயணம் செய்தால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் செல்வம் செல்வாக்கு புகழ் என எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று ஸ்ரீராகவேந்த்ரர் ஆதிசங்கரர் ஸ்ரீ ராமானுஜர் காஞ்சி மஹா பெரியவா என எண்ணற்ற மகான்கள் கூறுகின்றனர்.
*லோகா சமஸ்தா சுகினோ பவந்து