படிக்கவே புண்ணியம் வேண்டும். திருத்தலம் பதிவு

330

பரம்பொருள் பரமேஸ்வரனின் அடி,முடி எப்படி அறிய முடியாதோ அப்படி தான் இந்த கோவிலின் சிறப்புகளும் பெருமையும்…

“திருவாரூரில் பிறந்தால் முக்தி
காசியில் இறந்தால் முக்தி
அண்ணாமலை நினைத்தால் முக்தி
இங்கே உத்திரகோசமங்கை
மண்ணை மிதித்தால் முக்தி”

ஸ்தலப் பெருமை:

யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையே
யார் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பெயர் அறியாத பெரும் சுடர் ஒன்று
அதன் வேர் அறியாமல் விளம்புகின்றேனே

உலகிலேயே முதலில் தோன்றிய சைவ திருக்கோவில் எது தெரியுமா..?

இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித திருத்தலங்களில் ஒன்று ஆன திருஉத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சைவ திருக்கோவில் என நம்பப்படுகிறது.

அதற்கு ஆதாரம் இங்கு உள்ள நவகிரகங்கள்…

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த “சூரியன், சந்திரன், செவ்வாய்” மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளனர். இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

ஆதி சிதம்பரம்:

உத்திரகோசமங்கைப் பகுதி ஒரு சொல் வழக்கு உண்டு, மக்கள் அடிக்கடி சொல்வார்கள்.

“மண் முந்தியோ இல்லை
மங்கை முந்தியோ…”

வெறும் வார்த்தை இல்லை இது, அப்படியே நிஜம். காரணம் திருக்கோவிலின் தொன்மை அப்படி. இராவணன் அரசாண்ட போது இந்தக் திருக்கோவில் இருந்திருக்கிறது. ராமேஸ்வரம், திருவண்ணாமலை, சிதம்பரம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

ஆதலால் இந்த திருத்தலம் “ஆதி சிதம்பரம்” என புகழப்படுகிறது” இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த திருக்கோயில் பற்றிய படிக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். இனிவரும் நாட்களில் ஆதி சிதம்பரம் என புகழப்படும் திருஉத்திரகோசமங்கை ஸ்தலம் பற்றி காணலாம்…

உத்திரகோசைமங்கைக்கு அரசே போற்றி போற்றி