பாஞ்சஜன்யம்

141

பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு தான்!
இந்த பாஞ்சஜன்யம் என்பது ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும்!மொத்தத்தில் ஐந்து சங்குகள்!
ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள். கீழ்காணும் இந்த படத்தில் காணும் சங்குக்குள் நான்கு சங்குகள் இருக்கின்றன!
இது மிக மிக அபூர்வமானது! எனவே பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது!இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது!