மார்கழித் திங்கள் 6 / 7. பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

92

புள்ளும் சிலம்பினகாண்! எழுந்திங்கே வாரீரோ
வெள்ளிக் கதிரோனும் சீர்காஞ்சி நகர்வந்தான்
அள்ளக் குறையாத அருளமுதம் தருமுனிவன்
வெள்ளமெனக் கருணை பொங்கிடவே வீற்றிருக்க
உள்ளம் எடுத்தவனின் பதமலரில் ஸமர்ப்பித்து
மெள்ள வரும் அழுகை கொண்டிங்குள்ளிருக்கும்
கள்ளம் கபடெல்லாம் நீங்கத் துடைத்தமைதி
கொள்ளச் சென்றிடுவோம், அவன்பதமே சரண்புகுந்தோம் (6)

கீசுகீசென்றிங்கே பறவைகள் எல்லாம் சேர்ந்து
பேசியே வந்தன காண், சீர்காஞ்சி நகர் வாயில்
ஆசுகவிப் புலவர், பேரறிஞர், பண்டிதரும்
வாசி வாசியென்று வாசித்த செந்தமிழும்
நேசித்தவன் புகழைப் பாடிடவே வந்தனர் காண்
மாசில் மனத்தவராய் அடியார் நாம் நல்வாசம்
வீசும் மலரெடுத்து அவன்மேனி அலங்கரிப்போம்
தேசுடைய பொற்கழல்கள் பணிந்திங்கு சரண்புகுந்தோம் (7)