குத்து விளக்கெரிய, சன்னதியில் திருமுகமும்
முத்துச் சுடராக ஒளிதந்து பளபளக்கப்
பித்தாக்கி இங்கெந்தன் உள்ளம் கவர்ந்தானை,
சித்தம் தனதாக்கி, எனையடிமை கொண்டானை,
நித்தம் பாடிப் பரந்திங்கிருந்திடுவோம்!
வித்தக வேதவினோதனை, முக்தனை,
அத்தனை, சுத்தனை, எங்கள் மா சொத்தினை,
உத்தமனைத் தொழுது, அவன்பதமே சரண்புகுந்தோம்!