சபரிமலையில் பக்தர்கள் இதை செய்யவே கூடாது…!!

112

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் சபரிமலையில் என்னென்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்வோம்.
இருமுடிக்கட்டு இல்லாமல் 18ஆம் படி ஏறக்கூடாது.
புனிதமான பம்பை நதியை அசுத்தப்படுத்தக்கூடாது.
உடுத்திய ஆடைகளை பம்பை நதியில் களையக்கூடாது.
பக்தர்கள் புகை பிடிக்கக்கூடாது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
சரங்குத்தியில் தான் சரங்குச்சிகளை சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த பகுதியிலும் அவற்றை போடக்கூடாது.
சாப்பிட்ட பின் இலைகள் மற்றும் கழிவுகளை பம்பை நதியில் போடக்கூடாது.
18ஆம் படி மீது தேங்காய்களை வீசி உடைக்கக்கூடாது.
தேங்காய்களை உடைக்க 18ஆம் படியின் அருகிலேயே தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கற்பூர ஆராதனை செய்பவர்கள் தீயை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடாது.
அடுப்பு வைத்து சமையல் செய்யும் பக்தர்கள் சமையல் முடிந்த பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.