ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடி சரணம்

130

எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, எங்கள் கிருஷ்ணன் குணமானால் போதும்.” என நேசி க்கும் பக்தர்கள் மகிமையினை விளக்கும் எளிய கதை
அன்று ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி. கிருஷ் ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் வரிசையாக வந்து மருந்துகள் கொடுத்தாலும் அவர் தலைவலி போகவில்லை.
நாரதர் தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள், கொண்டுவந்து தருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தி யுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து.
அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெ ற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடு ம் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்க ள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.
கிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந் தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபி யர்களிடம் சொன்னார்.
உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யா ரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.
மேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரக ம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத் துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தனர். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத் துளியின் மூட்டையைக் காட்டினார்.
கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவ னப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றி யில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது.
இரண்டு விஷயங்க ள் முக்கியமாக இதிலிரு ந்து தெரிகிறது. ஒன்று, பகவான் பக்தர்களை எந்தஅளவு நேசிக்கிறான் என்பதும், இன்னொ ன்று அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனி ன் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்றும்…
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்….