ஸ்ரீ விநாயகர்

192

நாம் தொடங்கும் சகல காரியங்களிலும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர், ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.

பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும், வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும், நான்கு கரங்களை உடையவரும், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்.

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து.

கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.

வ்ராத கணபதி மந்திரம் …

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமே தேவ சர்வகார்யேஷு சர்வதா

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்

லீலா கணேச விக்னேச ஸர்வ துக்க நிவாரக
த்வயி பக்திம் பராந்தேஹி க்ருபயா ரக்ஷமாம் ஸதா