வட திருநள்ளாறு

79

வட திருநள்ளாறு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது.
அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத் தில் உள்ளது. அந்த லிங்கம் சுயம்புவானது. அகஸ்திய ருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத் தலத்தில் காண்பித்தார்.
சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவா னால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும்.
சனிபகவானுக்கு பரிகாரம் சனிபகவான் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து இருந்தார். அது சனி தீர்த்தம் ஆகும். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தை வடதிருநள்ளாறு என்றும் சொல்கிறார்கள். திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர் கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்