வெளுத்துப் போன செந்தூர முகம்.

98

சீதையைத் துன்புறுத்திய ராட்சஷிகளைக் கொல்ல அனுமன் அனுமதி கேட்டார். சீதை மறுத்தாள்.
“ஆஞ்சநேயா உன் பார்வையில் அவர்கள் தப்பு செய்தவர்களாக தெரியலாம் என் பார்வையில் அவர்கள் தவறேதும் செய்யவில்லை. எஜமான் இட்ட கட்டளையைத் தான் நிறைவேற்றினார்க ள். அது தவறு என்றாலும் கூட, உலகில் தவறே செய்யாதவர்கள் யாரும் கிடையாது. சொல்ல போனால், தவறு செய்தது நீயும், நானும், ராம
பிரானும் தான்..” என்றாள்.
ஆஞ்சநேயர் அதிர்ந்து விட்டார். “அம்மா.. என் இருதயத்தில் கொலு வீற்றிருக்கும் ராமபிரான் என்னம்மா தப்பு செய்தார்?..” கண்ணீருடன் கேட்டார்.
“தன் மனைவி மாற்றான் ஒருவனிடம் சிக்கியி ருக்கிறாள் என்பதும், அவள் தன் கற்பைக் காப்பாற்ற எந்தளவு போராடுவாள் என்பதும் அவருக்குத் தெரியாதா? அவர் வந்து என்னை காப்பாற்றாவிட்டால், அவரது பெருமை நிலை க்குமா? கேள் என்று உன்னிடத்தில் சொல்லி யனுப்பினேன். அதன் பிறகு தானே அவர் என்னை மீட்க வந்திருக்கிறார்..”
” மனைவி எங்கிருந்தாலும் என்ன கதியில் இருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டிய கணவனின் கடமை. இத்தனை நாள் என்னை அவர் இங்கே விட்டு வைத்தது குற்றம்..” என்றாள் சீதை.
” நீங்கள் சொல்வது சரிதான் தாயே.. நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?..” என்று கேட்டார் அனுமன்.
என் குடும்ப விஷயம் என் வீட்டுக்குள் தான் முடங்கி கிடந்திருக்க வேண்டும். என் கணவன் என்னை இங்கே பத்துமாதமாக விட்டு வைத்தி ருக்கிறான் என்று உன்னிடம் சொன்னேன் அல்லவா. கணவன் எப்படிப் பட்டவனாக இருந் தாலும், அதுபற்றி பிறரிடம் விமர்சிப்பவள் உத்தம பத்தினியாக மாட்டாள்.”என்றாள் சீதா.
“நான் என்னம்மா தவறு செய்தேன்?” என்றான் அனுமன்.
” இந்த ராட்சஷிகளை கொல்லப்போகிறேன் என்றாயே! அது தான் நீ செய்த தவறு. கூனி போன்றவர்கள் எங்கள் வீட்டு உப்பைத் தின்று என் கணவருக்கே துரோகம் செய்தார்கள். அவளையே அந்த ராமபிரான் பொறுத்துக் கொண்டாரே! அவரது பக்தனான நீ, இப்படி சொல்லி யிருக்கலாமா?..” என்றாள்.
இதை கேட்டு, அனுமனின் செந்தூர முகம் வெளுத்துப் போய்விட்டது…
ஜெய ராம் ஜெய ராம்… ஜெய ஜெய சீதாராம்…