அஷ்ட பைரவர்களின் ஆயுதமும் வாகனமும்

0 196
அசிதாங்க பைரவர்:
 முக்கண், தலைமாலை, கதை, கபாலம், பாநபாத்திரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம், திகம்பரத் தோற்றம், வெண்மையான நிறத்தில், ப்ரஹ்மாணி சக்தியுடன் அன்ன வாகனத்தில் வீற்றிருப்பார்.
ருரு பைரவர்:
 முக்கண், டங்கம், க்ருஷ்ணாமிருகம் (மான்) பாநபாத்திரம், கத்தி, மகேஸ்வரி சக்தியுடன் ரிஷப வாகனத்தில் வீற்றிருப்பார்.

சண்ட பைரவர்:
 முக்கண், சாந்த முகம், வில், அம்பு, கத்தி, பாநபாத்திரம், வெண்ணிறம் கொண்டவர். கௌமாரி சக்தியுடன் மயில் வாகனத்தில் வீற்றிருப்பார்.
குரோத பைரவர்:
 முக்கண், கதை, சங்கம், பாநபாத்திரம், சாந்தமுகம், குமாரர், திகம்பரத்தோற்றம், நீல நிறத்துடன் இலக்குமி சக்தியுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.
உன்மத்த பைரவர்:
 முக்கண், குமாரர், திகம்பரத்தோற்றம், கட்கம் (கத்தி), கபாலம், உலக்கை, கேடயம், வராகி சக்தியுடன் அஸ்வ (குதிரை) வாகனத்தில் வீற்றிருப்பார்.

 கபால பைரவர்:
 பாசக்கயிறு, வஜ்ரம், கத்தி, பாநபாத்திரம், இந்திராணி சக்தியுடன் யானை (கஜம்) வாகனத்தில் வீற்றிருப்பார்.
பீஷண பைரவர்:
 கத்தி, சூலம், கபாலம், உலக்கை, சாமுண்டி சக்தியுடன் சிவந்த நிறத்தோடு கூடியவராக பிரேத வாகனத்தில் வீற்றிருப்பார்.
சம்ஹார பைரவர்: 
 1௦ கைகள், முக்கண், சர்ப்பப்பூணூல், கோரைப்பற்கள், குமாரர், திகம்பரத் தோற்றம் , சண்டிகா சக்தியுடன், சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பார். இவரது கைகளில் சூலம், டமருகம், சங்கம், பாநபாத்திரம், கதை, சக்கரம், கத்தி, கட்வாங்கம், பாசம், அங்குசம் காணப்படும். தேகத்தில் தலை மாலைகளை அணிந்து காணப்படுவார். (சில விக்ரஹத்தில் நாய் வாகனத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது).
Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.