அங்க குறைபாடு நீங்க கூனஞ்சேரி கோயில் வழிபாடு!

124

அங்க குறைபாடு நீங்க கூனஞ்சேரி கோயில் வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை. இந்த கோயிலிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் கிட்டத்தட்ட 10 கிமீ தூரத்தில் கூனஞ்சேரி கோயில் அமைந்துள்ளது. ஆதனூர் மற்றும் புள்ளபூதங்குடி ஆகிய இரு வைணவ தலங்களுக்கு இடையில் கூனஞ்சேரி கோயில் அமைந்துள்ளது. கூனஞ்சேரி கோயிலில் பார்வதி சமேத கயிலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால், பாதிக்கப்பட்டவர்களின் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். மேலும், 11 அஷ்டமி நாட்களில் கூனஞ்சேரி கோயில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதலாவது அஷ்டமி நாளில் வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். 2ஆவது அஷ்டமி நாளில் கயிலாசநாதரை வழிபட வேண்டும். 3ஆவது அஷ்டமி முதல் 8ஆவது அஷ்டமி நாள் வரை அஷ்ட லிங்கங்களையும் வணங்க வேண்டும்.

இறுதியாக, 11ஆவது அஷ்டமி நாளில் பார்வதி தேவியை வழிபட அங்க குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதீகம்.