அடகு வைத்த நகைகள் மீட்க ஒரு எளிய பரிகாரம்!

210

அடகு வைத்த நகைகள் மீட்க ஒரு எளிய பரிகாரம்!

பொதுவாக வாங்கும் நகைகளில் சில அவசரத்திற்கு அடமானம் வைக்கப்பட்டாலும் அதனை திரும்ப எடுக்க சில எளிய பரிகாரங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது.

மகாலட்சுமி அம்சம் என்றாலே அது கல் உப்பு தான். இந்த கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய, இன்னும் சில பொருட்களை சேர்த்து, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில், அதற்கான பலனை நம்மால் உடனடியாக பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

கல் உப்பு:

வெள்ளிக்கிழமை அன்று, கடையிலிருந்து சென்று, புது உப்பை வாங்கி வரவேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரிலோ அல்லது கண்ணாடி பௌலிலோ அல்லது பீங்கான் ஜாடியாக இருந்தாலும் சரி தான், உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ, அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பீங்கான், கண்ணாடி இந்த இரண்டினால் செய்யப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த பரிகாரம்  நம்  வீட்டில் இருக்கக்கூடிய உப்பை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். புதிதாக உப்பு வாங்கிக் கொண்டு செய்யவேண்டும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் அலங்காரத்தை முடித்துவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையிலேயே அமர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். கண்ணாடி டம்ளரில், புதியதாக வாங்கிய உப்பைக் கொட்டி நிரப்பிக்கொள்ள வேண்டும். உப்பின் மேல் மஞ்சள் பொடியை தூவ வேண்டும். குங்குமத்தையும் தூவ வேண்டும். மூன்றாவதாக பச்சரிசியால் செய்த அட்சதையை தூவி விடுங்கள். இறுதியாக அதன்மேல் ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமி தாயார்:

இந்த எலுமிச்சை பழத்தை வைப்பிற்கு மகாலட்சுமி திருவுருவப்படத்தின் முன்பு, மகாலட்சுமி தாயாரின் பாதத்தை தொட்டு வருமானம் அதிகரிக்க வேண்டும். கஷ்டங்கள் தீர வேண்டும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகை சீக்கிரமே மீட்டெடுக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை உப்பின் மேல் வைக்க வேண்டும். பரிகாரத்தை செய்யும் போது மனதில் மகாலட்சுமியை வேண்டிக்கொள்ள வேண்டும். எலுமிச்சையை கட்டாயம் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் தொட்டு எடுக்கவேண்டும்.

கண்ணாடி டம்ளர் எலுமிச்சை சிறிது நேரம் அது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அதன்பின்பு, அந்த டம்ப்ளரை எடுத்து நீங்கள் நகை வைக்கும் பெட்டிக்கு பக்கத்தில் வைக்க வேண்டும். பணம் இருக்கும் பீரோ பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். நகை வைக்கும் அலமாரி இருந்தால், அந்த அலமாரிக்கு பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால், மூன்று நாட்கள் கழித்து, திங்கள்கிழமை இந்த பொருட்களை எல்லாம் ஓடும் தண்ணீரில் கொட்டி விடலாம். முடியாதவர்கள் ஒரு கவரில் கொட்டி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்யும்போதே உங்களுக்கு நல்ல பலன்கிடைத்து விட்டால் மீண்டும் அடுத்த வாரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.