அதிர்ஷ்டம் கிடைத்துக் கொண்டே இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

103

அதிர்ஷ்டம் கிடைத்துக் கொண்டே இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

மேஷம் – வெள்ளியில் செய்த காப்பை ஆண்கள் தங்களது வலது கையிலும், பெண்கள் இரண்டு கையிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம் – ஏழை எளியோருக்கு பசு மற்றும் கன்றை ஒரேயொரு முறை தானம் கொடுக்க வேண்டும்.

மிதுனம் – ஏழை எளியவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உதவி செய்ய வேண்டும்.

கடகம் – குழந்தை பெற்ற தாய் மற்றும் சேய்க்கு புது துணி மற்றும் பால் வாங்கி கொடுக்க வேண்டும்.

சிம்மம் – செப்பில் செய்த சாமி படம் பதித்த டாலரை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

கன்னி – மழைநீரை சேமித்து வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும்.

துலாம் – வெள்ளிக்கிழமை தோறும் வீடு முழுவதும் பசு கோமியம் தெளிக்க வேண்டும்.

விருச்சிகம் – குளத்தின் ஓரம் அரசமரம் நட்டு நீரூற்றி வளர்த்து வர வேண்டும்.

தனுசு – ஏழை எளியோருக்கு உணவு, உடை என்று ஏதேனும் தானம் கொடுக்க வேண்டும்.

மகரம் – வாரத்திற்கு ஒரு நாள் சுத்தமான பசும்பாலுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து ஆலமர வேரில் ஊற்றி அந்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்து நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும்.

கும்பம் – குளிக்கும் நீரில் அடிக்கடி 10 சொட்டு பால் கலந்து குளிக்க வேண்டும்

மீனம் – பசுவுக்கும், கன்றுக்கும் அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்து வர வேண்டும்.