அனாதை ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவ ப்ரணகால தோஷம் நீங்கும்!

201

அனாதை ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவ ப்ரணகால தோஷம் நீங்கும்!

உண்ணும் உணவில் அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் என்று 5 வகையான தோஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வாழ்க்கையில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 விதமான தோஷங்கள் சொல்லப்படுகிறது.

பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் தோஷங்களுக்கு பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எதனால், எப்படி பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சம்ஸ்கார தோஷம் மற்றும் ப்ரணகால தோஷம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

சம்ஸ்கார தோஷம்:

தாய் மற்றும் மனைவி ஆகியோரால் சமைத்து பரிமாறப்படும் உணவை உண்ணுவது சிறப்பு வாய்ந்தது. பழைய உணவு, அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள், அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவுகள் ஆகியவை உடலுக்கும், உள்ளத்துக்கும் கேடு விளைவிக்கும். இதற்கு சம்ஸ்கார தோஷம் என்று பெயர். அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் ஆகியவற்றை நீக்கி நாம் சாப்பிட வேண்டும்.

ப்ரணகால தோஷம்:

வெறும் பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு மட்டும் ஆசைப்பட்டு திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் ஒரு பற்று இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷம் நீங்க, அனாதை ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு தான தர்மங்கள் செய்து வர நன்மை உண்டாகும்.