உங்களது வீட்டில் இருள் சூழ்ந்துள்ளதா? அப்போ இதை செய்து பாருங்கள்!

112

உங்களது வீட்டில் இருள் சூழ்ந்துள்ளதா? அப்போ இதை செய்து பாருங்கள்!

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்….

வீடானது சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும்.

தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட, நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம்.

யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும் இனம்புரியாத ஏதோ ஒரு கஷ்டமும் நம் மனதை பிசையும் போது, நம்முடைய வீட்டை அந்த இருளிலிருந்து வெளியில் கொண்டுவர வேண்டியது கட்டாயம் நம்முடைய கடமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை தான் செய்யவேண்டும் என்றெல்லாம் காத்திருக்க வேண்டாம். உங்கள் மனதிற்கு எப்போது கஷ்டம் என்று படுகிறதோ அப்போதே இதை ஒருமுறை செஞ்சுடுங்க. முதலில் வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபத்தை போட்டுவிடுங்கள். அதன்பின்பு பூஜை அறையை அலங்காரம் செய்து வாசனை உள்ள பூக்களை போட்டு, முடிந்தவரை ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்தாலும் போதும்.

ஒரு சொம்பில், கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் 2, கிராம்பு 2, பச்சைக் கற்பூரம் ஒரு துண்டு, பன்னீர் நான்கு  சொட்டு, விரலி மஞ்சள், சோம்பு, கொஞ்சம் கற்பூரவள்ளி இலை,  கொஞ்சம் மருதாணி இலை, துளசி இலை, நன்னாரி தூள் ஒரு ஸ்பூன், இவைகள் அனைத்தையும், ஒன்றாக போட்டுக்கொள்ள வேண்டும். மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், இதில் எது உங்கள் வீட்டில் இருக்கின்றதோ அதை, அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம்.

காலை நேரத்திலேயே இந்த தண்ணீரை தயார் செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மாலை நேரம் வரை இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் நன்றாக ஊறிய உடன், மா இலையை வைத்தோ அல்லது வெற்றிலையை வைத்தோ, அந்தத் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டாலே போதும். கூடவே, உங்கள் வீட்டின் உறுப்பினர்களது தலையில் இந்த தீர்த்த தண்ணீர் தெளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் இருள்நீங்கி மகாலட்சுமி மீண்டும் வாசம் செய்வாள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

உங்கள் வீட்டில் இருள் சூழ்ந்து பிரச்சினை வரப்போகிறது என்று உங்கள் உள் மனது சொல்லும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த தண்ணீரை தெளித்து விட்டால், வரக்கூடிய பெரிய கஷ்டங்களில் இருந்து கண்டிப்பாக தப்பித்துக் கொள்ளலாம்.